Radikaa Sarathkumar completed 43 years in cinema - Congratulations Sarathkumar
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடித்து அசத்துபவர் நடிகை ராதிகா. இவர் சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 43 வருடங்கள் நிறைவடைகிறது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களிலும், தமிழில் பல டிவி தொடர்களிலும் நடித்துள்ள நடிகை ராதிகா தற்போதும் சினிமா, டிவி என மிகவும் பிசியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.
ராதிகாவின் 43 வருட திரையுலகப் பயணத்திற்கு அவரது கணவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். “என்னுடைய அன்பு மனைவி மற்றும் சிறந்த தோழிக்கு, சினிமா துறையில் 43 ஆண்டுகள் புகழுடன் இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் ஒரு சிறந்த நடிகையாக மட்டும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. குறை சொல்ல முடியாத நடிகையாகவும், தொழில்முனைவோராகவும் முத்திரை பதித்துள்ளீர்கள். இனி வரும் காலங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், வெற்றிகள் ஆகியவற்றை உங்களது நடிப்பின் மூலம் உருவாக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ராதிகா,” எனப் பாராட்டியுள்ளார்.
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…
Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…
Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…