radhika-sarathkumar-post-viral
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா 1978-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘பூவரசம்பூ பூத்தாச்சு’ பாடல் இன்று வரை ரசிகர்கள் நினைவில் இருக்கும் பாடலாக உள்ளது. தொடர்ந்து இவர் தயாரித்து நடித்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படம் இயக்குனரின் சிறந்த அறிமுகப் படத்திற்கான இந்திரா காந்தி விருதை வென்றது.நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கி, இந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களை இயக்கி நடித்துள்ளார்.
தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை குவித்துள்ள ராதிகா இன்றும் தன் நடிப்பு திறமையால் மிளிர்கிறார். இவர் தற்போது பல டாப் ஹீரோக்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்நிலையில், நடிகை ராதிகா ஒரு படத்தை விமர்சித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘எந்தப் படத்தையாவது பார்த்து கிரிஞ்சா இருக்குனு யாருக்காவது தோணிருக்கா? இந்த படத்தை பார்க்கும் பொழுது வாமிட் வரும் அளவிற்கு கோபம் வருது’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு அனிமல் மற்றும் ஹனுமான் திரைப்படத்தை ராதிகா விமர்சிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…