Radhika Sarathkumar in Upcoming Serial Update
தென்னிந்திய சினிமாவில் 80களில் நடிகையாக வலம் வந்து பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் இவர் நடித்த சீரியல்கள் எக்கச்சக்கம். இவரது நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி உள்ளிட்ட சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சித்தி சீரியல் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி அதில் நடித்து வந்தார். அரசியல் காரணமாக இந்த சீரியலில் இருந்து அவர் விலகிக் கொண்டார்.
இந்த நிலையில் நடிகை ராதிகா மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறார். ஆனால் இந்த முறை சன் டிவியில் இல்லை கலைஞர் தொலைக்காட்சியில் பொன்னி என்ற சீரியல் மூலம் என்ட்ரி கொடுக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தயாரிக்க உள்ள இந்த சீரியலில் கெஸ்ட் ரோலிலும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…