Question about bedroom scene Strict Malavika Mohanan
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதும் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில், மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பினர்.
அதில் ரசிகர் ஒருவர் மாறன் படத்தில் தனுஷ் உடனான படுக்கையறை காட்சியை எத்தனை முறை படமாக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, கடுப்பான மாளவிகா உங்கள் மண்டைக்குள் மோசமான எண்ணம் உடைய இடம் இருக்கிறது என காட்டமாக பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…