விஜயை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த ரசிகர்கள் கூட்டம்..கடைசியில் காத்திருந்த ஷாக்

நடிகர் விஜய் நடித்து வெங்கட்பிரபு இயக்கும் ‘தி கோட்’ திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் புதுவையில் உள்ள பழமை வாய்ந்த ஏ.எப்.டி. மில்லில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார்.தமிழக வெற்றி கழகம் தொடங்கி தலைவரான பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் படப்பிடிப்புக்கு வந்துள்ளார் என்ற தகவல் பரவியது. இதனையடுத்து விஜயை காண்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் புதுவை, கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி. மில் முன்பு குவிந்தனர்.தளபதி.. தளபதி… என்று கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பில் இருந்த விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கை கூப்பி கலைந்து செல்லும்படி கேட்டும் ரசிகர்கள் கலையவில்லை.மாறாக மில் எதிரில் உள்ள மரத்தின் மீது ஏறியும் மில் சுவற்றின் மீதும் ஏறியும் விஜயை காண ரசிகர்கள் முயன்றனர்.

மாலை 5.45 மணிக்கு படப்பிடிப்பில் இருந்து வெளியே வேனில் வந்த விஜய் மில் நுழைவு வாயிலில் வேன் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.தொடர்ந்து அவரது பாணியில் முத்தத்தை பறக்க விட்டார். ரசிகர்கள் அவர் மீது பூக்களை தூவியும் மாலையை வீசியும் மகிழ்ச்சியை தெரிவித்தனர். ரசிகர்கள் ஒருவர் வீசிய மாலையை விஜய் அணிந்து கொண்டார். பின்னர் விஜய் அந்த மாலைகளை ரசிகர்களிடமே வீசி அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார். பின்னர் படப்பிடிப்பு தளத்திற்குள் சென்றார். இதனையடுத்து ரசிகர்கள் கூட்டம் கலைந்து கடலூர் சாலையில் போக்குவரத்து சீரானது.நடிகர் விஜய் ரசிகர்கள் சந்தித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் மீண்டும் ரசிகர்கள் கூட்டம் ஏ.எப்.டி. மில் நோக்கி வந்தனர். அதில் பெண்கள், சிறுவர், சிறுமிகளும் ஆர்வமுடன் திரண்டு நின்றனர். அவர்கள் நடிகர் விஜயை பார்த்து விட்டுதான் செல்வோம் என்று நீண்ட நேரம் நின்றனர்.

போலீசார் கூட்டத்தை கலைந்து செல்லும்படி வற்புறுத்தியும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. விஜய் படப்பிடிப்பில் இருந்து சென்றுவிட்டார் என்று உறுதியான தகவல் வந்த பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர். மாலை 3 மணியில் இருந்து இரவு 9மணி வரை சுமார் 6 மணி நேரம் விஜயை காண ரசிகர்கள் கூட்டம் குவிந்திருந்தனர்.இன்னும் 2 நாட்கள் படப்பிடிப்பு புதுவையில் நடைபெற உள்ளது. இன்று மதியம் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்பார் என திரைப்பட குழுவினர் தெரிவித்தனர். ஏற்கனவே இதே ஏ.எப்.டி. மில்லில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லால் சலாம்’ சினிமா படிப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

puducherry-fans-who-waited-till-night-to-see-actor-vijay-shooting
jothika lakshu

Recent Posts

Thennaadu Lyric Video

Thennaadu Lyric Video | Bison Kaalamaadan ,Dhruv, Anupama , Mari Selvaraj , Nivas K Prasanna…

5 hours ago

Tere Ishk Mein Teaser Tamil

Tere Ishk Mein Teaser Tamil | Dhanush, Kriti Sanon | ‪AR Rahman‬ | Aanand L…

5 hours ago

Aaryan Tamil Teaser

Aaryan Tamil Teaser | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…

6 hours ago

கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

11 hours ago

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…

14 hours ago

இட்லி கடை: 1 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

14 hours ago