ps2-movie-songs-release-update
தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.
உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பையும் சில மாதங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்திருந்தது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இப்படம் குறித்த அடுத்த அப்டேட்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தற்போது புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்களின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…