விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

90-களில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். ‘கேப்டன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார். இதையடுத்து நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.தொடர்ந்து, விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார்.

இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், \”திரைஉலகில் ஒரு நடிகராய் உதயமாகி, புரட்சிகலைஞராய் பெயரெடுத்து, கேப்டன் என்று தலையெடுத்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவராய் பதவி வகித்து, தேமுதிக தலைவராய் உருவெடுத்து, தமிழக எதிர்கட்சி தலைவராய் கால் பதித்து, தனகென்று ஒரு தனி பெயரை ஈட்டிய அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் இயற்கை எய்தினார் என்ற செய்தி எனது இதயத்தை ஈட்டி போல் தாக்கியது.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்\” என்று குறிப்பிட்டுள்ளனர்.”,

producers-association-condoles-vijayakanth update
jothika lakshu

Recent Posts

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

13 hours ago

விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ்.??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…

17 hours ago

ஸ்ருதிக்கு வந்த ஐடியா, பிரச்சனையில் சிக்கிய சீதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…

17 hours ago

சபரி மற்றும் பார்வதி இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

17 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, சுந்தரவள்ளி முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

20 hours ago

கனி கேட்ட கேள்வி, பார்வதி சொன்ன பதில், வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

20 hours ago