கோலாகலமாக நடந்த தயாரிப்பாளர் கதிரவனின் திருமணம்… வாழ்த்தும் பிரபலங்கள்!

அவளுக்கென்ன அழகிய முகம் தயாரிப்பாளர் கதிரவனுக்கு பூஜா என்பவருடன் கலைஞர் அரங்கத்தில் கோலாகலமாக திருமணம் நடந்துமுடிந்தது.

தமிழ் சினிமாவில் அவளுக்கென்ன அழகிய முகம் என்ற படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானவர் கதிரவன்.

கதிரவன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக இந்த படத்தைத் தயாரித்திருந்தார். படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

மேலும் கதிரவன் அவர்கள் திமுகவில் காஞ்சி வடக்கு மாவட்ட பொறியியலாளர் அணி அமைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்து வருகிறார். இவருடைய தந்தையும் மாங்காடு பேரூர் கழக முன்னாள் செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

கதிரவனுக்கு பூஜா என்பவருடன் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் ஸ்டாலின் தாலி எடுத்து கொடுக்க கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு அளித்து வருவதால் திமுகவை சேர்ந்த அத்தனை பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனால் தேனாம்பேட்டை பகுதி சாலைகள் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து போனது.

இவர்களின் திருமணத்தை தொடர்ந்து கதிரவனின் தம்பியும் அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் நாயகனான விஜய் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இன்று மாங்காட்டில் உள்ள சக்தி பேலஸ் என்ற திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கதிரவன் மற்றும் அவரின் தம்பி விஜய் கார்த்திக் ஆகியோரின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய கலக்கல் சினிமாவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

Suresh

Recent Posts

MYSAA Teaser

MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films

15 minutes ago

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

2 days ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

2 days ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

2 days ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

2 days ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

2 days ago