மலையாளத்தில் 2017-ல் வெளியான ஒரு அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர்.
இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் அவர் கண்ணடிப்பது சமூக வலைத்தளத்தை அதிர வைத்தது. இதனால் பிரியா வாரியர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன.
பிரியா வாரியர் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனால் அந்த படம் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. தற்போது இரண்டு இந்தி படங்களையும், ஒரு கன்னட படத்தையும் அவர் கைவசம் வைத்திருக்கிறார்.
இந்தநிலையில் மலையாள படம் ஒன்றில் நடிக்க பிரியா ஒப்பந்தமாகி உள்ளார். பிரபல இயக்குனர் வி.கே.பிரகாஷ் இயக்க உள்ள இப்படத்திற்கு ‘நால்பதுகாரண்டே இருபத்தியொன்காரி’ என பெயரிட்டுள்ளனர்.
கதாசிரியரும், குணச்சித்திர நடிகருமான அனூப் மேனன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். தலைப்பே படத்தின் கதையை சொல்லும் விதமாக அமைந்து இருக்கிறது. அதாவது ஒரு 40 வயது ஆணுக்கும், 21 வயது பெண்ணுக்குமான காதல் தான் படத்தின் கதையாம்.
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…