Categories: NewsTamil News

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் யோகிபாபு படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு

பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற படங்களை போல் யோகிபாபுவின் படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் `காக்டெய்ல்’. அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார். இதில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோரும் நடித்துள்ளார்கள். `காக்டெயில்’ என்ற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த `மதுரை வீரன்’ படத்தின் இயக்குனரும், லிசா, டேனி ஆகிய படங்களின் தயாரிப்பாளருமான பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தை மார்ச் 20-ந் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில், இப்படத்தை திரையரங்குக்கு பதிலாக நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 10-ந் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.

admin

Recent Posts

“நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா?” – விமர்சனங்களுக்கு தனுஷின் பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,…

8 hours ago

ஜனநாயக கடமையை நிறைவேற்ற சென்னை திரும்பிய அஜித் குமார்

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை…

8 hours ago

இந்த வாரம் OTT-யில் ‘ஹேப்பி ராஜ்’ வெளியீடு!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது…

8 hours ago

Amarkalam Re-Release Official Trailer

Amarkalam Re-Release Official Trailer | Ajith Kumar & Shalini | April 24 | Sparrow Cinemas

9 hours ago

Breakfast Trailer

Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna…

9 hours ago

கார்த்திக் சுப்புராஜ் – லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ’29’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…

10 hours ago