Priya Bhavani Shankar in Vadivelu film
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் கைவசம், குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே, ருத்ரன், பத்து தல, ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவ்வாறு டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ள பிரியா பவானி சங்கர், மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…