தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜ் தோல்வி

தெலுங்கு சினிமாவின் நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் களம் இறங்கினார். பிரகாஷ் ராஜூக்கு சிரஞ்சீவி, பவன் கல்யாண் உட்பட பெரிய நடிகர்களின் ஆதரவு இருந்தது. இதனால் பிரகாஷ்ராஜ் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது.

மொத்தம் உள்ள 900 உறுப்பினர்களில் 833 பேருக்குத்தான் ஓட்டுப் போடும் உரிமை இருந்தது. இதில் 655 ஓட்டுக்கள் பதிவானது. விஷ்ணு மஞ்சுக்கு 381 ஓட்டுக்களும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் 274 ஓட்டுக்களும் பெற்றார். இதன்மூலம் 113 ஓட்டு வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சுவிடம் தோல்வியடைந்தார் பிரகாஷ்ராஜ். ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ், சமந்தா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஓட்டுப்பதிவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

2 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

2 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

2 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

2 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

2 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

3 days ago