Pradeep Ranganathan's new film... Massive update!
பிரதீப் ரங்கநாதனின் புதிய படம்… மாஸாக வந்த அப்டேட்!
பிரதீப் இயக்கி நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..
லவ்டுடே, டிராகன், ‘டியூட்’ என ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சயின்ஸ் பிக்சன் பாணியில் இப்படத்தினை ஆக்ஷன் கலந்து உருவாக்கவுள்ளார் பிரதீப். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு நாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விரைவில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது.
‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனை ஒரே கட்டமாக படமாக்கி முடித்து, அடுத்தாண்டு இறுதியில் வெளியிட ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…