Prabhas gaining weight for Adipurush movie
நடிகர் பிரபாஸின் 21-வது படம் ‘ஆதிபுருஷ்’. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. ராமாயணத்தின் ஒருபகுதியை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர்.
இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர்.
இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் பிரபாஸ் உடல் எடையை அதிகரித்து வருவதாக பாலிவுட் நடிகர் சன்னி சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “நானும், பிரபாஸும் இந்தப் படத்திற்காக உடல் எடையை அதிகரிக்கவும், கைகளின் தசைகளை வலுவாக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறோம்.
ஆனால் அதற்காக செயற்கையான மருந்துகளோ, ஊசிகளோ பயன்படுத்தாமல், இயற்கையான முறையிலேயே நாங்கள் பயிற்சி செய்து வருகிறோம்” என கூறியுள்ளார்.
நடிகர் சன்னி சிங், ஆதிபுருஷ் படத்தில் லக்ஷ்மண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…