Prabhas' epic film to be postponed by Corona
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார். அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை வருகிற ஜூலை 30-ந் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ளதால் இப்படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என படக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…