powder-movie release date update
தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் சகோதரர் சாருஹாசன் 87 வயதில் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் தான் தாதா 87. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் பாட்டி நாயகியாக நடித்திருந்தார்.
வித்தியாசமான கதை களத்துடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீ இயக்கத்தில் பொல்லாத உலகில் பயங்கர கேம் பப்ஜி, பவுடர் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
பவுடர் படத்தில் தமிழ் சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் உட்பட பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதுவரை தமிழ் சினிமா பார்க்காத மாறுபட்ட கதை களத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இப்படியான நிலையில் தற்போது இந்த படம் வரும் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. தாதா 87 திரைப்படத்தைப் போலவே இந்த படமும் விஜய் ஸ்ரீ அவர்களுக்கு ஒரு முக்கிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…