Pooja Hegde to pair up with Surya following Vijay
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார்.
அதன்பின் சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தான் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சிவா தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Gatta Kusthi 2 Teaser | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Chella Ayyavu | Sean Roldan…
Moondram Kan Official Teaser | Vidaarth | Kalaiyarasan | Sago Ganesan | RS Rajprathap
Samharam Official Trailer | Niya Vargees | Praijin | Sharu Nisha | Loud Line Music
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம்…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அரசன்’. தீபாவளி…
பாப் இசை உலகின் மறக்க முடியாத நட்சத்திரமான மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் இன்றளவும் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.…