பொன்னியின் செல்வன் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்

மிகப்பெரிய பிரம்மாண்ட கதையான ‘கல்கி புகழ் பெற்ற பொன்னியன் செல்வன் நாவலை’ அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கி வரும் படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்திக்,ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் பிரகாஷ்ராஜ், பிரபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்தின் அப்டேட்களை பட குழு அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

அதாவது பொன்னி நதி என்று பெயரிடப்பட்டு, போஸ்டர் ஒன்றையும் படக்குழு பகிர்ந்து, சோழர்களின் உலகில் இசைப் பயணத்தைத் தொடங்குவோம் என்று குறிப்பிட்டு இப்படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 31ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்ற தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டருடன் இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

37 minutes ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

41 minutes ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

3 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

3 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

4 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

4 hours ago