pizza-3 movie review
சென்னையில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருபவர் அஸ்வின் காகுமனு. இந்த ரெஸ்டாரண்டில் உரிமையாளருக்கோ, பணியாளர்களுக்கோ தெரியாமல் அடிக்கடி ஒரு சுவீட் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சுவீட் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. யார் சுவீட் செய்தார்கள் என்று மர்மமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து இரண்டு கொலைகள் நடக்கிறது. யார் சுவீட் செய்தார்கள்? கொலைக்கான காரணம் என்ன? மர்ம கொலையாளிகள் யார்? என்பதே மீதி கதை.
ரெஸ்டாரண்டில் நடக்கும் மர்மங்களுக்கு விடை தெரியாமல் தத்தளிக்கும் காட்சிகளில் அஸ்வின் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவரது காதலியாக வரும் பவித்ரா மாரிமுத்து பேய்களுடன் நேரடியாக ‘செயலி மூலம் பேசி போராடி கடைசியில் கண்டுபிடிப்பதும் காதலனுக்கு ஆதரவாக அண்ணனிடம் நடக்கும் சம்பவங்களை கூறி விசாரணையை திருப்பும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.
படம் ஆரம்பம் முதல் முடிவு வரை திகிலாகவே செல்கிறது. எங்காவது ஓரிடத்தில் சிறிய காமெடியை சேர்த்து இருக்கலாமே என்பது ரசிகர்களின் முணுமுணுப்பாக இருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சிகள் படத்திற்கு உயிரோட்டமாக உள்ளது. ஆனால், பேய் படங்களுக்கு உண்டான அதே பாணியை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் மோகன் கோவிந்த். சில வருடங்களுக்கு முன்பு ஒரு அப்பார்ட்மெண்டில் மன வளர்ச்சி குன்றிய மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு கூறும் படமாக அமைந்துள்ளது பீட்சா 3.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அபியும், தட்டி கேட்ட அவரது தாயார் அனுபமா குமார் ஆகியோரின் கதாபாத்திரம் மனதில் நிற்க வைக்கிறது. பிரபு ராகவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். அருண்ராஜ் இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. மொத்தத்தில் பீட்சா 3 டேஸ்ட் குறைவு.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…