pistha movie review
தங்கள் விரும்பம் இல்லாமல் பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும் பெண்களை அவரது காதலர்களுடன் சேர்த்து வைக்கும் வேலையை செய்கிறார் ஷிரிஷ். இதற்காக ஒரு நிறுவனம் தொடங்கி இதையே தொழிலாக செய்து வரும் யோகி பாபுவிடம் ஷிரிஷ் ஊழியராக வேலை செய்கிறார்.
இந்நிலையில், ஷிரிஷுக்கு கதாநாயகி மிருதுளா முரளி மீது காதல் வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் மனதார விரும்புகிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் ஷிரிஷ் மணப்பெண்களை கடத்தும் தொழில் மிருதுளாவிற்கு தெரியவர இந்த தொழிலை விட்டுவிடுமாறு கூறுகிறார். ஷிரிஷும் தான் செய்யும் தொழிலை விட்டுவிடுகிறார்.
இந்த இடத்தில் தான் விதி அவரது வாழ்க்கையில் விளையாடுகிறது. யோகி பாபு தனக்காக ஒரு பெண்ணை கடத்தி வர சொல்கிறார். ஆனால் அந்த கடத்தல் தோல்வியடைந்து ஷிரிஷை போலீசார் கைது செய்கின்றனர். இதனை பார்த்த மிருதுளாவிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. தன்னை ஏமாற்றி விட்டதாக யோகி பாபு, ஷிரிஷை பழிவாங்க நினைக்கிறார்.
இறுதியில் ஷிரிஷ் மிருதுளாவை கரம் பிடித்தாரா? யோகிபாபு மற்றும் ஷிரிஷ் இடையே மோதல் ஏற்பட்டதா? என்பதே மீதிக்கதை.
ஷிரிஷ் முதல் பாதியில் தனது கதாபாத்திரத்தை கோட்டைவிட்டாலும் இறுதியில் கதையில் ஒன்றியுள்ளார். மணப்பெண்களை அவர் கடத்தும் விதம் சிறப்பு. மிருதுளா உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வசன காமெடி மூலம் படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார், சதிஷ். யோகி பாபு தனக்கான கதாபாத்திரத்தை திறைமையாக செய்துள்ளார்.
காமெடி ஜானரில் படத்தை எடுக்க முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறார் இயக்குனர் எம்.ரமேஷ் பாரதி. இடைவேளை வரை, கதையும், காட்சிகளும் எந்தவித கவன ஈர்ப்பும் இல்லாமல் கடந்து செல்கின்றன. கிளைமேக்ஸில் கதையுடன் பார்வையாளர்களை ஒன்ற வைத்து விடுகிறார் இயக்குனர்.
தரன் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் தான். எம்.விஜய் ஒளிப்பதிவில் ஸ்கோர் செய்துள்ளார்.
மொத்தத்தில் ‘பிஸ்தா’ – முயற்சி தேவை.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…