நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் அன்டனி தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன்.
இப்படம் வெளியாகி ரசிகர்களின் மிக வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்தது. மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகி வெற்றி கண்டது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என கூறப்பட்டது.
ஆனால் பெயரை அறிவிக்காமல் விஜய் அன்டனியின் இரண்டாம் பாகத்தின் திரைப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குனர் இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் தற்போது அந்த பிச்சைக்காரன் 2 பாகம் என்றும் கதை, திரைக்கதையை விஜய் அன்டனி எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தை தேசிய விருது வென்ற பாரம் திரைப்படத்தை இயக்கிய ப்ரியா கிருஷ்ணாசாமி தான் இயக்கவுள்ளார் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…