இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் பார்த்திபன் நடிகர் அமீர்கானை புகழ்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இந்தி’ய திரையுலகில் அவருடைய படங்கள் மூலம், மிக உயர்வாக மதிக்கப்படும் சிறந்த நடிகர். ஒவ்வொரு முறையும் என்னை ஆச்சர்ய ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் மனிதர். நேற்றிரவு கமல் சார் பிறந்த நாளில் … நடப்பவை(பவங்)களை ஒரு ஒதுக்கு புறமாக நின்று ரசித்துக் கொண்டிருந்த என்னை கண்டு ஓடி வந்து இறுக அனைத்துக் கொண்டு நெற்றியில் என்னவென்று விசாரித்து, தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சுகமில்லை என வருந்தி,அடுத்த படமென்ன?- தெரிந்துக் கொண்டு,பின்னர் திரும்பிச் செல்கையில் மறக்காமல் வந்து சொல்லிவிட்டு சென்றார்.
எங்கே சென்றார் ? இதயத்தின் நாற்புறமும் ஆணியடித்து அங்குமிங்கும் நகரா நாற்காலியிட்டு அமர்ந்துக் கொண்டார். இத்தனைக்கும் சிற்சில சந்திப்பே இதற்குமுன்… என் விடாமுயற்சிகளை பற்றி கேட்டறிந்து என்னை அவர் பாராட்டவும்,அவரின் நல்ல படங்களை நான் புகழவும் பழகினோம். அவரின் அற்புத நட்பு அலாதியானது. மணி சார்+கமல் சார்+ ரஹ்மான் சார்+ ரவி k சந்திரன் கூட்டனி மிரட்டியது ‘thug life’-ல்!” என்று பதிவிட்டுள்ளார்.
¡
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…