Parthiban in iravin nizhal movie ott release update
‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளனர். குறிப்பாக உலகிலேயே Non Linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இந்த இரவின் நிழல் என பார்த்திபன் பல்வேறு பேட்டிகளில் கூறி இருந்தார்.
இதனால் அதிக ஆர்வத்தோடு இருந்த ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமைந்திருந்தது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பல விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் இன்று அல்லது நாளை பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என்ற தகவலை நடிகர் பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ஆர்வத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், காலை வணக்கம்! அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்தே விடும். அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் இருக்கிறோம். பார்ப்போம் நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி. என்று அப்பதிவில் கூறியிருக்கிறார்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…