No wonder Ponmanachemmal celebrates revolutionary leader MGR: Director Nanjil B.C. Anbazhagan's speech.
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கொண்டாடுவதில் வியப்பில்லை: இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு.
கன்னியாகுமரி அருகே சுக்குப்பாறைத் தேரிவிளையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநரும், அதிமுக தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது:
1972-ம் ஆண்டு அதிமுகவை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆரம்பித்து 1977-ல் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அவர் இருக்கும்வரை முதலமைச்சராக இருந்து மறைந்தார். தமிழகத்தில் திமுகவும், கருணாநிதியும் தலைதூக்க முடியாமல் செய்தவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.
புரட்சித்தலைவர் ஒருநாள், மறைந்த முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் இல்லத்துக்குச் சென்றார். அப்போது காமராஜர் அவர்கள் எம்.ஜி.ஆரை தனது வீட்டில் சாப்பிடுமாறு அழைத்தார். ஆனால், எம்.ஜி.ஆர். அதனை அன்புடன் மறுத்ததுடன், இன்னொரு நாள் சாப்பிடுகிறேன். என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அப்போது, கார் ஓட்டுநர் எம்.ஜி.ஆரிடம், ‘காமராஜர் அழைத்தும் ஏன் சாப்பிடவில்லை’ என கேட்கிறார். அப்போது, எம்.ஜி.ஆர். சொன்னார், ‘காமராஜர் அவருக்கும் அவரது உதவியாளர் வைரவன் ஆகியோருக்கு மட்டுமே உணவு வைத்திருப்பார். இந்த நிலையில் நாம் சாப்பிடச் சென்றால் அவர்களுக்கு உணவு கிடைக்காமல் போய்விடும்’ என்றார்.
இந்நிலையில் காமராஜரிடம், உதவியாளர் வைரவன் கேட்டார், ‘வீட்டில் உணவு இல்லாதபோது எம்.ஜி.ஆரை சாப்பிட அழைத்தது ஏன்?’ என்றார். அப்போது காமராஜர், ‘எம்.ஜி.ஆர். ஏராளமானவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். அன்னதர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். நான் இன்று அவருக்கு உணவளித்து புண்ணியம் தேடிக்கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால், அதுகூட கிடைக்காமல் போய் விட்டது’ என்றார்.
பெருந்தலைவர் காமராஜர் 1967-ல் விருதுநகரில் போட்டியிட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள் கருணாநிதியிடம் ‘விருதுநகரில் அதிகமாக பிரசாரம் செய்ய வேண்டாம்’ என கூறியுள்ளார். ஆனால், காமராஜரை வன்மமாக கருணாநிதி பேசியுள்ளார். இது அண்ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் பிடிக்கவில்லை. இந்த தேர்தலில் காமராஜர் தோல்வியடைந்தார். இதனைக் கேள்விப்பட்டு அண்ணாவும், எம்.ஜி.ஆரும் கண்ணீர் மல்கியுள்ளனர்.
இதையடுத்து, நாகர்கோவிலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காமராஜர் போட்டியிட்டார். இங்கும் பிரசாரத்துக்கு வந்த கருணாநிதி ‘வாக்காளர்களே, மேரியின் மகனுக்கு உங்கள் வாக்கா? சிவகாமியின் மகனுக்கு உங்கள் வாக்கா? என இந்து, கிறிஸ்தவ பிரச்சினையை உருவாக்கி விட்டார். அமைதியாக பெண் கொடுத்து பெண் எடுத்து நாடார்கள் ஒன்றுமையாக வாழ்ந்த குமரி மண்ணில் விஷ விதையை விதைத்து பிரிவினைக்கு வித்திட்டதே கருணாநிதி என்றால் அவரது மோசமான புத்தியை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால், இதையெல்லாம் மீறி நாகர்கோவிலில் பெருந்தலைவர் வெற்றி பெற்றார். காரணம் இம்மாவட்ட மக்கள் அப்பச்சி என்ற ஒரே சிந்தனையில் ஜாதி, மதம் பார்க்காமல் அவருக்கு வாக்களித்தனர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1965-ல் சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது, இந்திய பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் பணத்தோட்டம் படத்துக்காக அந்தமானுக்கு சென்று எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றத்தை திறந்து வைத்தார். உலக வரலாற்றில் ஒரு நடிகருக்கு பிரதமர் நேரில் சென்று ரசிகர் மன்றத்தை திறந்து வைத்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே என்பது தலைவருக்கு கிடைத்த மரியாதை.
ஒரு தலைவன் தனது சொத்துக்கள் அனைத்தையும் ஏழை மக்களுக்காக வழங்கிய வரலாறும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு.
காமராஜர் தமிழகத்தில் ஆரம்ப கல்வியை கொடுத்தார். உயர்கல்வியை வழங்கியவர் எம்.ஜி.ஆர். மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது காமராஜர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர் தலைவர் எம்.ஜி.ஆர். வி.ஏ.ஓ என்ற பதவியை உருவாக்கி பல்வேறு இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றிவர் எம்.ஜி.ஆர். 68 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தை கொண்டு வந்ததுடன், சொத்துரிமையில் பெண்களுக்கும் அதிகாரத்தையும் கொண்டு வந்தார். ஒரு வீடு ஒரு விளக்கு திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட மகத்தான திட்டங்களுக்கு சொந்தக்காரர் தலைவர் எம்.ஜி.ஆர்.,
ராஜகுமாரி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தூக்கில் தொங்குவது போன்ற காட்சியில் உண்மையிலேயே தலைவரின் கழுத்தை கயிறு இறுக்கி விட்டது. அனைவரும் பயத்தில் உறைந்து நின்றபோது உத்திரம் உடைந்து விழுந்து தலைவர் உயிர் பிழைத்தார். பத்தரை மாற்று தங்கத்தை காப்பாற்ற உத்திரமே உடைந்து விழுந்ததைப் பார்த்து படத்தின் இயக்குநரும், நடிகர் நம்பியாரும் அழுது விட்டனராம். இதுதான் காலம் நமக்கு கொடையாக கொடுத்த தலைவன். எம்.ஆர்.ராதா சுட்டபோதும் உயிர் பிழைத்து வந்தவர். மரணத்தை வென்று வந்த மாமனிதரை இன்றும் தமிழகம் கொண்டாடுவதில் வியப்பில்லை’ என நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசினார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…