மெர்சல், 24 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். சில மாதங்களுக்கு முன் நடந்த பேஷன் நிகழ்ச்சியில் நித்யா மேனன் பங்கேற்றார். அதில் தான் அணிந்த உடையை அவர் முதல் கட்டமாக ஏலம் விடுகிறார். அதை தொடர்ந்து படங்களில் பயன்படுத்திய உடைகளை ஏலம் விட உள்ளார்.
இது பற்றி நித்யா மேனன் கூறியது:- ‘நான் இந்த உடையை ஏலத்திற்காக கொடுக்கப் போகிறேன். அதில் வரும் பணத்தில் 100 சதவீதமும் அப்பணம் டிரஸ்ட்டுக்கு செல்லும். அவர்கள் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
கொரோனாவால் முடங்கியுள்ள அவர்களுக்கு பண உதவி செய்து மீண்டும் அவர்கள் சொந்த காலிலேயே நிற்க வழி செய்யப்படுகிறது.
இந்த உடையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது பல மாதங்கள் தயாரான டிசைனர் உடை. அது எனக்காகவே ஸ்பெஷலாக செய்யப்பட்டது. பேஷன் நிகழ்ச்சியில் ரேம்ப் வாக் செய்வதற்காக தான் இந்த உடை டிசைன் செய்யப்பட்டது.
இதன் புகைப்படத்தை முன்பே நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறேன். நீங்கள் பார்த்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனது தோழியும் பிரபல டிசைனருமான காவேரி தான் இதை டிசைன் செய்தார். அவர் அழகான, இயற்கையாக தெரியும் உடைகளை தயாரிப்பவர் என்றார்.
மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது…
மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…