Nithya Menen To Star With Powerstar
மலையாளத்தில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாணும், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரம் என்றால் அது அய்யப்பன் மனைவி கண்ணம்மா கதாபாத்திரம் தான், அதன்படி தெலுங்கு ரீமேக்கில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் மனைவியாக நித்யா மேனன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷுக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Dashamakan - #Rap Battle Lyrical video, Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael ,…