மாதவன் மற்றும் அனுஷ்கா செட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்.. மூன்று மொழிகளில் அக்டோபர் 2 OTT-ல் ரிலீஸ் என அறிவிப்பு.!!

ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுப் பின், இந்த தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லர், பார்க்க வேண்டிய ஒரு படம் என்று நிச்சயமாக சொல்லலாம்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் நிசப்தம். இது பல பெரிய மும்மொழி திரைப்படங்களுக்கான கதவை திறக்கவுள்ளதால் அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் இது பற்றி கூறும்போது, ‘படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த பெரும் வரவேற்பால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். படம் பார்க்கும் முறை மாறிவிட்டது.

மேலும் பிராந்திய பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக, நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படம் நிசப்தம். இது நாட்டின் தொலைதூர நகரங்களில் உள்ள ஒவ்வொரு நபரையும் வளர்ச்சியடைந்ததாக உணர வைக்கும் என்று தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் இதை பிரதான சினிமா தளங்களின் ஒரு பகுதியாகவும் அவர்கள் பார்க்கிறார்கள். மிகப்பெரிய வாய்ப்புகளுக்காகவும், வெளியீட்டுக்காகவும் நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்’ என்றனர்.

இந்தியா உள்ளிட்ட 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் தெலுங்கு த்ரில்லரான நிசப்தம் (தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது) திரைப்படத்தை வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணலாம்.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டிஜி விஷ்வா பிரசாத் தயாரித்துள்ள நிசப்தம் திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஆர். மாதவன் மற்றும் அஞ்சலி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் அமெரிக்க நடிகரான மைக்கேல் மேட்சென் முதல் முறையாக இந்திய படமொன்றில் அறிமுகமாகிறார். இவர்களோடு ஷாலினி பாண்டே, சுப்பராஜு, ஸ்ரீனிவாஸ் அவஸராலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் துணுக்குகளை பார்த்த பார்வையாளர்கள் படத்துக்காக காத்திருக்கின்றனர். இப்படத்தின் தெலுங்கு பதிப்பை ராணாவும், தமிழ் பதிப்பை விஜய் சேதுபதியும் வெளியிட்டனர்.

இந்த கொண்டாட்டமான திரைப்படத்தை தங்கள் திரைகளில் காண பார்வையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்!

admin

Recent Posts

சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பரமு, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…

7 hours ago

சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள ஜனநாயகன்.. தொடர்ந்து ரிலீசில் வரும் சிக்கல், வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…

11 hours ago

கருப்பு : ஆர் ஜே பாலாஜி கொடுத்த அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…

14 hours ago

VEGULI – Official Teaser

VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ

14 hours ago

Kadhal Reset Repeat – Official Teaser

Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…

1 day ago