Nikki Galrani Engagement With Aadhi
தமிழ் சினிமாவின் மரகத நாணயம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆதி. இவரது நடிப்பில் இறுதியாக கிளாப் என்ற திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாகி வெற்றி பெற்றது.
இவருடன் இணைந்து மரகதநாணயம் படத்தில் இணைந்து நடித்திருந்தார் நிக்கி கல்ராணி. அந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் ஆதியை காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியான வண்ணம் இருந்தது.
சமீபத்தில் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களில் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…