New updates on Vijay Deverakonda and Keerthy Suresh's upcoming film
விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் புதிய அப்டேட்ஸ்
விஜய் தேவராகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரியில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கு ‘ரவுடி ஜனார்த்தனா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
ரவி கிரண் கோலா இயக்கும் இப்படத்தை, ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். ஆனந்த் சி.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
1980-களில் கிழக்கு கோதாவரியைக் களமாகக் கொண்ட இப்படம், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இதன் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் கையில் அரிவாளுடன் ரத்தம் தெறித்த உடலுடன் வெளியாகியுள்ள விஜய் தேவரகொண்டா தோற்றம் மிரட்டலாக இருக்கிறது.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி சுரேஷ் நடிப்பை தொடர்வதுபோல, ராஷ்மிகாவும் தொடர்வாரா என தேவரகொண்டாவிடம் நெட்டிசன்ஸ் கேட்டு வருகின்றனர்.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…