அனுபமாவின் “லாக் டவுன்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பதுபோல, திரைப்படம் இயக்கிப் பார் என்பதும் பொருத்தம்தான். ஆம், அத்தனை போராட்டமானது. இப்ப விஷயத்திற்கு வருவோம்..
அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.
இந்நிலையில், லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ளார். சார்லி, நிரோஷா, பிரியா உள்பட பலர் இணைந்துள்ளனர்.
இப்படத்துக்கு என்.ஆர். ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இச்சூழலில், ‘லாக் டவுன்’ திரைப்படம் வருகின்ற 30-ந்தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. ஒரு ஆண்டுக்கு மேலாக ரிலீஸுக்காக காத்திருந்த இப்படம் டிசம்பர் 5-ந்தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டு பின், டிசம்பர் 12 அன்று வெளியாகும் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…