New issue for Arvind Swamy 'Vanangamudi'
அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘வணங்காமுடி’. ‘நான் அவன் இல்லை’, ‘குரு என் ஆளு’ ஆகிய படங்களை இயக்கிய செல்வா இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வணங்காமுடி என்ற தலைப்பில் ஏற்கனவே கடந்த 1957-ல் ஒரு படம் வெளியாகி உள்ளது. சிவாஜி கணேசன், சாவித்திரி, நம்பியார் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தை ஏ.கே.பாலசுப்ரமணியம் தயாரித்திருந்தார்.
இந்நிலையில், முறையான அனுமதி பெறாமல் தன்னுடைய தந்தை தயாரித்த படத்தின் தலைப்பை அரவிந்த் சாமி நடித்துள்ள படத்துக்கு பயன்படுத்தி இருப்பதாகவும், இதற்காக சட்டப்போராட்டம் நடத்த தான் தயாராக இருப்பதாகவும் ஏ.கே.பாலசுப்ரமணியத்தின் மகன் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அசின். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல திரைப்படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. அந்த வகையில், சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில்…
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஆர்யா, சபீர்,…
தேசிய விருது பெற்ற இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘#PocketNovel’ (பாக்கெட் நாவல்). ‘ஆரண்ய காண்டம்’,…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இதற்கிடையே விரைவில் கதாநாயகனாகவும் களமிறங்க…
Arikomban Official Teaser | Mithun Maheshwaran | Sagishna Xavier