New crisis for the film 'Jananayagan'.. The film crew is in trouble.. Shocking information has been released.
‘ஜனநாயகன்’ படத்துக்கு புதிய நெருக்கடி.. சிக்கலில் படக்குழு.. வெளியான அதிர்ச்சி தகவல்
விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனம் நெருக்கடி கொடுப்பதாக தெரிவித்துள்ளது.
அதாவது, ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனநாயகன் பட நிறுவனத்துக்கு அமேசான் வீடியோ தெரிவித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதனால், ஜனநாயகன் படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தை பெரும் தொகைக்கு வாங்கியுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனம், திட்டமிட்டப்படி படம் திரையரங்களில் வெளியாகாத காரணத்தால் அதிருப்தியில் இருக்கிறது. இதனால் தயாரிப்பு தரப்புக்கு அமேசான் நிறுவனம் நெருக்கடி கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், சென்சார் வழக்கில் தணிக்கை குழுவின் நடவடிக்கை காரணமாக படக்குழுவுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் தணிக்கை வாரியம் சொன்ன காட்சிகளை நீக்கிய பிறகும் அந்த காட்சிகளையே புகாராக கூறியுள்ளனர் எனவும் தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். இச்சூழலில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…
'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…