‘அரசன்’ படம், எப்போது ரிலீஸ் தெரியுமா?

‘அரசன்’ படம், எப்போது ரிலீஸ் தெரியுமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று முடிந்தது. எடுத்தவரை எடிட் செய்து பார்த்ததில் வெற்றிமாறனுக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சிம்புவின் நடிப்பு ஹைலைட்டாக அமைந்திருப்பதாக சொல்கின்றார்கள். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாமா என படக்குழு ஆலோசிக்கிறது.

கடைசியாக சிம்பு நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘போடா போடி’ படம் சிம்புவின் தீபாவளி ரிலீஸ் படமாகும். 2012-ம் ஆண்டு இப்படம் விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்துடன் வெளியானது. அதன் பிறகு கடந்த 14 வருடங்களாக சிம்புவின் வேறெந்த படமும் தீபாவளிக்கு வெளியானதில்லை.

இந்நிலையில் ‘அரசன்’ படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது சிம்பு ரசிகர்களுக்கு கண்டிப்பாக கொண்டாட்டமாக இருக்கும். இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Do you know when the movie ‘Arasan’ will be released?
dinesh kumar

Recent Posts

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

12 hours ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

12 hours ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

12 hours ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

12 hours ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

12 hours ago

‘தமிழ் படம் 3’ குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த சிவா!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…

12 hours ago