ஜெயிலர் 2 படத்தில் பெரிய சர்பிரைஸ் வைத்திருக்கும் நெல்சன்
நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த மகன் அர்ஜுனை காவல்துறை அதிகாரியான முத்துவேல் பாண்டியன் சுட்டுக் கொன்றுவிடுவதாக படம் முடிந்து விடுவது தெரிந்ததே.
இந்நிலையில் உருவாகும் ‘ஜெயிலர்-2’ படத்தில் அர்ஜுன் கேரக்டரில் மீண்டும் பார்க்கலாமா என வசந்த் ரவியிடம் கேள்விகள் கேட்பது தொடர்கிறது. இதனால், யார் கேட்டாலும் முதலில் பதில் சொல்லாமல் இருந்த வசந்த் ரவி, தற்போது ‘சர்ப்பிரைஸ்’ என்று மட்டும் சொல்கிறார்.
‘சர்ப்பிரைஸ்’ எனும் இந்த ஒரு வார்த்தையை வைத்து ரசிகர்களாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
‘ஜெயிலர்-2’ படத்தில் நான் நடிக்கவில்லை என்று வசந்த் ரவி சொல்லவில்லை. அப்படியென்றால் அவரை ஜெயிலர்- 2 படத்தில் பார்க்கலாம் என கணித்து வருகின்றனர் ரசிகர்கள். முதல் பாகத்தில் இறந்ததாக காட்டப்படும் ஒரு கதாபாத்திரம், இரண்டாம் பாகத்தில் வந்தால் அது நிச்சயம் சர்ப்பிரைஸ் தான்.
மேலும் ‘ஜெயிலர் 2’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் ஷாருக்கான், மிதுன் சக்கரவர்த்தி, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், விஜய் சேதுபதி ஆகியோரும் இணைந்துள்ளனர்.
அதிலும் ரஜினியுடன் வரும் சிவராஜ்குமாரின் கதாபாத்திரம் முதல் பாகத்தை போன்று இல்லாமல் இரண்டாம் பாகத்தில் கூடுதல் காட்சிகளில் வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…