nayanthara-75-shooting-began-pooja
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் தற்போது ஜெயம் ரவியுடன் இறைவன் மற்றும் ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் “நயன்தாரா 75” என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
இப்படம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் உருவாகவுள்ளது. இதில் கதாநாயகனாக நடிகர் ஜெய் நடிக்க சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். தமன் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் நயன்தாரா 75 படகுழுவினர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று ஆசி பெற்றதுடன் இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளனர். இதன் வீடியோவையும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…