நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு, பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் விஜயன் (வயது31).
பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான இவர், யூடியூபர் சூர்யா தேவியுடன் நண்பராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நாஞ்சில் விஜயன் – சூர்யா தேவி கடந்த 2020-ம் ஆண்டு திரைப்பட நடிகை வனிதா விஜயகுமாருக்கு நடந்த திருமணம் தொடர்பாக வனிதா விஜயகுமாரும், சூர்யாதேவியும் சமூக வலைதளத்தில் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை வெளியிட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் நாஞ்சில் விஜயன், வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக இருப்பதாக கூறி சூர்யா தேவி அவரது அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது, நாஞ்சில் விஜயன், சூர்யா தேவியை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
நாஞ்சில் விஜயன் – சூர்யா தேவி இதையடுத்து நாஞ்சில் விஜயன் மீது சூர்யா தேவி அளித்த புகாரின் அடிப்படையில், நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்வேறு சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையிலும், நாஞ்சில் விஜயன் விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி நடிகர் நாஞ்சில் விஜயனை வளசரவாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்நிலையில் அவருக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…