தம்பதியர் மீது மோதி காரை மோதிய நடிகர் நாகபூஷனா.. காவல்துறை வழக்கு பதிவு

சங்கஷ்ட கர கணபதி” எனும் திரைப்படம் மூலம் 2018ல் திரையுலகில் அறிமுகமான நாகபூஷனா, இக்கத், படவா ராஸ்கல் மற்றும் ஹனிமூன் ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். ‘இக்கத்’ படத்திற்காக சிறந்த நடிகர் விருது வாங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகபூஷனா நேற்றிரவு 09:45 மணியளவில் பெங்களூருவின் உத்தரஹள்ளி பகுதியிலிருந்து புறநகர் பகுதியான கொனனகுன்டே எனும் இடத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

கார் வசந்தபுரம் மெயின் ரோடு அருகில் வரும் போது அங்கு கிருஷ்ணா (58) மற்றும் அவரது மனைவி பிரேர்னா (48) எனும் தம்பதி நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். காரை ஓட்டி வந்த நாகபூஷனா தீடிரென கட்டுப்பாட்டை இழந்தார். இதை தொடர்ந்து நடந்து சென்ற தம்பதியர் மீது கார் மோதியது. அவர்கள் மீது மோதிய கார், அருகே இருந்த ஒரு மின்சார கம்பத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தினை தொடர்ந்து இருவரையும், நாகபூஷனா உடனடியாக முனைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். இருந்தும், துரதிர்ஷ்டவசமாக பிரேர்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கால்கள், தலை மற்றும் வயிற்று பகுதியில் அடிபட்ட கிருஷ்ணாவிற்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கியதற்காக நாகபூஷனா மீது குமாரசுவாமி போக்குவரத்து காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

nagabhushana-arrested-after-crashing-his-car
jothika lakshu

Recent Posts

காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி – நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…

1 hour ago

எதிர்மறை விமர்சனங்களை பின்னுக்குத் தள்ளி வசூலில் அசத்தும் ‘டாக்சிக்’!

கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…

1 hour ago

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

1 day ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

1 day ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

1 day ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

1 day ago