Naane Varuven Movie Poster Controversy
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தில் வில்லனாக இயக்குனர் செல்வராகவன் அவர்களே நடிக்கிறார். ஏற்கனவே சில போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் நடிகர் தனுஷ் வாயில் சிகரெட்டுடன் மாஸ் லுக்கில் இருக்கிறார். இந்தப் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
மேலும் தனுஷ் தொடர்ந்து அவரது படங்களில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருவது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து படங்களில் இப்படி சிகரெட்டுடன் போஸ் கொடுப்பது உங்களது ரசிகர்களையும் கெடுத்துவிடும் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…