my-dear-bootham- Serial abilash-photo
நடிகர் அபிலாஷ் தெலுங்கு தொடரான “விசித்ர கதா மல்லிகா” மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழில் ‘வீட்டுக்கு வீடு லூட்டி’ , ‘விக்ரமாதித்யன்’, ‘மகள்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘அபிராமி’, ‘கொடி முல்லை’ போன்ற தொடர்களில் நடித்திருந்தார். கணினியியலில் பட்டம் பெற்ற இவர் “மை டியர் பூதம்”, என்ற தொடரில் நடித்த பின் 90ஸ் கிட்சன் பேவரட் ஆனார்.
2004 ஆம் ஆண்டில் வெளியான இந்த “மை டியர் பூதம்” சீரியல் தினமும் சன் டிவியில் மாலை 6 மணி அளவில் ஒளிபரப்பானது. அப்போது இந்த சீரியலை 90ஸ் கிட்ஸ் ஆனா குழந்தைகள் விரும்பி கண்டு களித்து வந்தனர். இந்த சீரியலில் மூசா கதாபாத்திரத்தில் இருக்கும் அபிலாஷ் நண்பர்களுக்கு வரும் ஆபத்தை தனது மாயாஜாலத்தின் மூலம் காப்பாற்றுவார். இந்த தொடர் கிட்டத்தட்ட 900 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்தது.
தற்போது அபிலாஷ் வெள்ளித்திரையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக தனது பணியை தொடர்ந்து வருகிறார். இவர் தோனி கபடி குழு, நாகேஷ் திரையரங்கம் போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இவர் தான் ‘மை டியர் பூதம்’ மூசா என்று அடையாளம் கண்டுபிடித்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…