மூன்றாவது முறையாக இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடும் தீனா. வைரலாகும் தகவல்

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், இதுவரை வாக்கு உரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இதை எதிர்ப்பு ஒரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்படி, திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் மீண்டும் நடத்தப்பட இருக்கிறது.

வரும் பிப்ரவரி 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் அலுவலக கட்டிடத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாக, சங்கத்தின் தலைவர் தீனா அறிவித்துள்ளார். மேலும், தேர்தலில் மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் தீனா தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இது குறித்த அறிவிப்பை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டு பேசிய இசையமைப்பாளர் தீனா, “அசோசியேட் உறுப்பினர்களுக்கு எந்த வகை சலுகைகளும் இல்லாமல் இருந்ததோடு, அவர்களுகு வாக்கு உரிமை உள்ளிட்ட எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது. இது பற்றி பலர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள். அதனால், சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நான் முயற்சி மேற்கொண்டு அவர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தேன். தற்போது மூன்றாவது முறை நான் தலைவராக வெற்றி பெற்றால், அசோசியேட் உறுப்பினர்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க பாடுவேன்.

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் தான் முதல் சங்கம். ஆனால், எங்கள் கட்டிடம் இன்னும் பழமையாகவே இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம். நான் முதல் முறையாக தலைவராக வந்த போதே இதற்கான முயற்சியில் இறங்கினேன். ஆனால், கொரோனா பாதிப்பு வந்ததால் தடைப்பட்டு விட்டது. தற்போது நான் மீண்டும் தலைவரான இந்த முறை சங்கத்தின் கட்டிடத்தை கட்டுவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுவேன்.” என்று தெரிவித்தார்.

Music director dheena Latest news viral
jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

5 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

5 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

5 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

5 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

5 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

5 days ago