movie-team-about-hrithik-roshan
மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாபெரும் ஹிட் அடித்திருந்த படம் தான் “விக்ரம் வேதா”. இப்படத்தை புஷ்கர்-காயத்ரி இருவரும் இணைந்து இயக்கியிருந்தனர். இப்படம் ரசிகர்களின் இடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை கொடுத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். அதில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர்.
இந்தியாவில் படப்பிடிப்புக்கு வர மறுத்திருக்கும் ரித்திக் ரோஷன் – இது குறித்து விளக்கம் கொடுத்திருக்கும் படக்குழு.
தமிழில் “விக்ரம் வேதா” படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர். அண்மையில் இப்படத்திற்கான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் இடையே அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. சமீபத்தில் இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை பட குழு வெளியிட்டு இருந்தது.
இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பிற்காக உத்தரப்பிரதேசத்திற்கு வர ஹிருத்திக் ரோஷன் மறுத்ததாகவும், இதனால் துபாயில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தியதால் படத்தின் பட்ஜெட் அதிகமாகியுள்ளது என்ற வதந்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அதில் “விக்ரம் வேதா” படம் குறித்து இணையத்தில் பரவி இருக்கும் செய்திகள் அனைத்தும் போலியானவை.
இப்படம் இந்தியாவில் லக்னோ உள்ளிட்ட பட இடங்களில் தான் படமாக்கப்பட்டுள்ளது. விக்ரம் வேதா படத்தின் ஒரு பகுதி மட்டும், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அமீரகத்தில் படமாக்கப்பட்டது. துபாயில் நடத்தியதற்கு காரணம், அங்கு தான் பயோ பபுளுடன் பணியாட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தும் சூழலுக்கு அனுமதி கிடைத்து. அத்துடன் படக்குழுவினரின் உடல் நலம் கருதியும் அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு இப்படத்திற்கான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதோடு இணையத்தில் வைரலாகியும் வருகின்றது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…