More film opportunities are coming after marriageMore film opportunities are coming after marriage - Actress Anandhi - Actress Anandhi
கயல், விசாரணை, பரியேறும் பெருமாள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்று தொடர்ந்து அழுத்தமான கதைகளில் நடித்து வரும் ஆனந்தி தற்போது ராஜசேகர் துரைசாமி இயக்கிய “கமலி பிரம் நடுக்காவேரி” படத்தில் நடித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு: “குடும்ப வாழ்க்கையில் எனது கணவர் ஆதரவாக இருக்கிறார். நான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது தான் அவர் ஆசை. திருமணத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் வராது என்பார்கள்.
ஆனால் எனக்கு இப்போதுதான் அதிக படங்கள் வருகிறது. பெற்றோரை விட ஒரு பெண் மேல் அன்பு செலுத்துவது யாராகவும் இருக்க முடியாது.
ஆனால் சில பெண்கள் தன் வாழ்வை பற்றி அறிந்து கொள்வதில்லை. எங்காவது வழி தவறி விடுகிறார்கள். அதனால் தான் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.
இதுபோன்ற பிரச்சினைகளை எப்படி கடப்பது என்று கமலி பிரம் நடுக்காவேரி படத்தில் சொல்லப்பட்டு உள்ளது. ஆண்களுக்கு இருப்பதுபோல் பெண்களுக்கு ஆதரவு கிடைப்பதில்லை. அவர்களுக்கு திறமையிருந்தாலும் கனவு நிறைவேறுவதில்லை.” இவ்வாறு ஆனந்தி கூறினார்.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…