ராஜா தம்பி பேத்திக்கு வந்த ஆபத்து, காப்பாற்ற போவது யார்? மூன்று முடிச்சு, மருமகள் சீரியல் மகா சங்கமம் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் சூர்யா பிரபுவிடம் உன்னை யார் ஐஸ் வண்டியை தள்ளிட்டு வர சொன்னது என்று கோபப்பட அவரும் பதிலுக்கு வாக்குவாதம் சொல்கிறார். நந்தினி தயவு செய்து பிரச்சனையை விடுங்க என்று சொல்ல திருடர்கள் அம்மன் நகையை மூட்டையில் கட்டி மரத்து பக்கத்தில் வைத்து இருவரும் நகையை வைத்துக்கொண்டு இதுக்கு மேல நகையை வெளியில் எடுத்துக்கிட்டு போக முடியாது போலீஸ் நிறைய இருக்காங்க இங்கே தான் எங்கேயாவது வைக்கணும் என்று யோசித்து இருவரும் கார் பக்கத்தில் வந்து நகையுடன் காந்தத்தை வைத்து கீழே ஒட்டி விடலாம். யாருக்கும் தெரியாது திருவிழா முடிஞ்சவுடன் நம்ம நகை எடுத்துக்கிட்டு ஓடிடலாம் என்று சொல்லுகிறார். எப்பயும் இந்த கார் நம்ம கண் பார்வையிலே இருக்கணும் என்று சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யாவும் கார்த்தியும் உட்கார்ந்து குடித்துக்கொண்டு இருக்க சூர்யா உன் அண்ணன் எதுக்கு இப்படி இருக்கான். ஆதிரை எப்படி அவன் கூட வாழ்கிறார் என்று சொல்ல எங்க அண்ணி ஏதோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழறாங்க என்று சொல்லுகிறார்.

கொஞ்ச நேரத்தில் ஏகாம்பரமும் வர சூர்யா அவரையும் குடிக்க வரவேற்று உட்கார வைத்து ஊத்தி கொடுக்க மூவரும் ஒன்றாக சேர்ந்து குடிக்கின்றனர்.அவன் உன்கிட்ட மட்டும் சண்டை போடல எல்லார்கிட்டயும் தான் சண்டை போடுறான் அவன் உனக்கு மட்டும் இல்ல எனக்கும் தான் என்று சொல்லுகிறார். மேகலை ஆதிரையிடம் கண்டிப்பா அந்த சமபந்தி விருந்துல எல்லாரும் கலந்துப்பாங்க நீங்க மனச போட்டு குழப்பிக்காதீங்க என்று பேசிக்கொண்டு இருக்க நந்தினி ஆதிரையிடம் வந்து மன்னிப்பு கேட்கிறார். நான் அந்த ஐஸ் வேண்டிய விட்ருங்க என்று எவ்வளவோ சொன்ன அவர்தான் எதுவும் கேட்கல நீங்க எதுவும் கவலைப்படாதீங்க என்று சொல்லுகிறார். நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களா என்று சொல்லி விட்டு, உங்களுக்கு கண்ணாடி வளையல் வாங்கி கொடுக்கவே பிரபு அண்ணா யோசிக்கிறாரு அப்படிப்பட்டவர் கிட்ட வாழ்வதற்கு உங்களுக்கு கஷ்டமா இல்லையா என்று கேட்கிறார்.

ஆதிரை அமைதியாக இருக்க, கோச்சிக்கிட்டிங்களா என்று நந்தினி கேட்க, ஆடம்பர செலவுக்கும்,அத்தியாவசிய செலவுக்கும் இருக்கிற வித்தியாசம் தெரிஞ்சவங்க என் புருஷனை புரிஞ்சுப்பாங்க நானும் முதல்ல அவரை தப்பா தான் புரிஞ்சுகிட்டேன் அப்புறமா தெரிஞ்சது என்று நந்தினி இடம் ஒரு நாள் என்று விஷயத்தை சொல்ல ஆரம்பிக்கிறார். ஆதிரையும் பிரபுவும் செப்பல் கடைக்கு வருகின்றனர். அங்கே 700 ரூபாய் செருப்பு காட்ட அதெல்லாம் தேவையில்லை நானே போய் பாக்குறேன் என்று செப்பல்களை பார்க்க எல்லாமே விலை அதிகமாக இருக்கிறது. 200 ரூபாயில் ஒரு செருப்பை பார்க்க ஆதிரை 700 ரூபாய் செருப்பை வாங்கி கொடுக்கிறார். நீங்க 200 ரூபாய் மட்டும் கொடுங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லி வாங்கி கொடுக்க பிரபு வண்டியில் வரும்போது ஆதிரையை திட்டிக் கொண்டே வர, வழியில் ஒரு நபர் அவரது மனைவியை ஒரு வண்டியில் தள்ளி கொண்டு போக அவருக்கு அந்த புது செருப்பை கொடுத்து விட்டு சாப்பிட்டீங்களா என்று கேட்க இல்லை என்று சொன்னவுடன் சாப்பிட 200 ரூபாய் பணத்தையும் கொடுக்க ஆதிரை பிரபுவை வியந்து பார்க்கிறார். இதனை நந்தினியிடம் சொல்ல நந்தினியும் பாராட்டுகிறார். அவரு கஷ்டப்பட்டு செலவு பண்றதுனாலதான் இந்தப் குடும்பம் இன்னைக்கு சந்தோஷமா இருக்கு என்று சொல்ல, நீங்க சொல்லும்போது பிரபு அண்ணன பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கு, நீங்க வைஃப்பா கிடைக்க பிரபு அண்ண ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் என்று சொல்ல மேகலைன்னு ஆதிரையை பாராட்டி பேசுகிறார்.

ஆதிரை நந்தினியிடம் சூர்யா அண்ணனை எதுக்கு சார்ன்னு கூப்பிடுறீங்க என்று கேட்க, எங்க ஐயா எங்களுக்கு சாமி மாதிரி அவரோட பையன் என்றதுனால நான் மரியாதையா தான் கூப்பிடுவேன் என்று சொல்ல மேகலை நீ பணக்கார வீட்டு மருமகளா இருந்தாலும் சிம்பிளா கோபுரத்து உச்சி மேல இருக்கிற விளக்கு மாதிரி இருக்க என்று சொல்ல சுந்தரவல்லி வந்து இவ கோபுரத்தில் இருக்கிற விளக்கா காத்துல பறந்து வந்த எச்ச இலை எப்ப வேணா பறந்து போயிடுவா என்று சொல்லுகிறார். ஆதிரை பேச வர நந்தினி தடுக்க, அவகிட்டயே நல்லா எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கோங்க என்று சொல்லிவிட்டு சுந்தரவல்லி சென்று விட நந்தினி கண்கலங்கி நிற்கிறார். ஆதிரை நந்தினி உடன் என்ன காரணத்துக்காக உங்க மாமியார் இப்படி கடுப்படிக்கிறாங்க என்று கேட்க நந்தினி சொல்ல வரும்போது பிரபு வந்து விடுகிறார்.

நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நீ மாடிக்கு வா என்று சொல்ல ஆதிரை அப்பா கிட்ட போன்ல பேசிட்டு வரேன் என்று சொல்ல பிரபு மாடிக்கு வர சூர்யா ஏகாம்பரம் கார்த்திக் மூவரும் கார் பிரபுவை கஞ்ச பையன் என்று தான் சொல்வோம் என்று பேசி சிரிக்க பிரபு கடுப்பாகி வந்து சூர்யாவிடம் சண்டை போடுகிறார். யார பாத்துடா கஞ்ச பையன் என்று சொன்ன நீதாண்டா குடிகாரன் என்று சொல்ல, கார்த்திக் சூர்யாவிற்கு ஆதரவாக பேச சட்டையை பிடித்து கேட்கிறார். சூர்யா கார்த்திக்கை விடு என்று சொல்ல, பிரபு விட முடியாது என்று சொல்லுகிறார். உனக்கு பிடிக்கலைன்னா நீ போ என்று சொல்ல, கோபப்பட்ட பிரபு சரக்கு பாட்டில்களை போட்டு உடைக்க சூர்யா பிரபு இடையே அடிதடி ஏற்படுகிறது. உடனே இரண்டு குடும்பத்தினரும் வந்து அவர்களை விலக்கி விடுகின்றனர். அருணாச்சலத்திடம் சூர்யா இதோட விலை எவ்வளவு தெரியுமா எனக்கு புடிச்ச எல்லா சரக்கையும் இவன் ஒடச்சி இருக்கான் என்ற கோபப்பட, ராஜா தம்பி இருவரையும் சண்டை வேண்டாம் என சமாதானப்படுத்தி அனுப்ப இப்போ போற ஆனா சரக்கு கிடைக்கலைன்னா இவனை சும்மா விட மாட்டேன் என்று வார்னிங் கொடுத்துவிட்டு போகிறார்.

மறுபக்கம் நகையை திருடிய திருடன் சூர்யா கார் பக்கத்தில் இருந்து எல்லாம் பத்திரமா இருக்கா என்று செக் பண்ணி பார்த்துக்கொண்டு இருக்க சூரியா ஏகாம்பரம் கார்த்தி மூவரும் காரில் ஏறி காரை எடுக்க போக உடனே ஆள் இருக்கேன் காரை எடுக்காதீங்க என்று கத்த யார்ரா நீ என்று கேட்க காத்து வாங்க கார் கீழ படுத்து இருக்கேன் என்று சொல்ல மூவரும் அவனை அடித்து விரட்டுகின்றனர். எனக்கு சந்தேகமா இருக்கு அவன் கார்ல ஏதாவது திருடி இருப்பான் என்று நான் செக் பண்றேன் என போக சூர்யா கார்த்திக்கை வேண்டாம் என சொல்லி காரில் அழைத்து சென்று விடுகிறார். வந்த இடத்துல எதுக்குங்க சண்டைக்கு நிக்கிறீங்க என்று ஆதிரை கேட்க நானா சண்டைக்கு வரேன் அவன் தான் வேணுனே பிரச்சனை பண்றான் 24 மணி நேரமும் குடிச்சுக்கிட்டு என்கிட்ட பிரச்சனை பண்றான் என்று சொல்ல, அப்போ நீங்களும் குடிச்சுட்டு சண்டை போடுங்க என்று சொல்ல எனக்கு தான் அந்த பழக்கமே இல்லையே என்று சொல்ல, உடனே ஆதிரை பிரபுவிடம் செல்லமாக பேசி உங்க சித்தப்பா சூர்யா பக்கத்துல உக்காந்து சாப்பிடும்போது நீங்க சாப்பிடாம எழுந்திருந்து வந்துடக்கூடாது நம்மளும் பதிலுக்கு நல்லா சாப்பிடணும் இல்லன்னா நம்ம பயந்துட்டோம்னு நினைப்பாங்க என்று சொல்ல ஓ இத வெச்சி அந்த ஏமாற்றுக்கார ஏகாம்பரத்திடம் பேச வச்சர்லான பாக்குறியா என்று பேசி உஷாராகி விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் ஏகாம்பரம் சூர்யாவிடம் அந்த கஞ்ச பயனை விட கூடாது ஒரே மிதியா மிதிச்சுடனும் என்று சொல்ல சூர்யா கோபமாக வீட்டுக்கு வருகிறார். உடனே பிரபுவிடம் வந்து சண்டை போட சுந்தரவல்லி உங்க பையனால எந்த இடத்துக்கு வந்தாலும் பிரச்சனை பண்ணாம இருக்க முடியாதா என்று கேட்கிறார்.

மறுபக்கம் ராஜா தம்பி பேத்தியை புலி வேஷம் போட்டிருப்பவர்கள் தூக்கிக்கொண்டு போக ஒரு பக்கம் ஆதிரை நந்தினி துரத்த மறுபக்கம் பிரபு ஓடி வருகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

MoondruMudichu Marumagal Serials Promo Update 24-06-25
jothika lakshu

Recent Posts

விரைவில் தொடங்க இருக்கும் ஜோடி ஆர் யூ ரெடி.. வெளியான ப்ரோமோ வீடியோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…

16 hours ago

ஜெயலர் படம் குறித்து பேசிய ராஜகுமாரன்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…

16 hours ago

மங்காத்தா படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

17 hours ago

ரவியை காதலிக்கும் நீத்து, கடுப்பான சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…

19 hours ago

ஆனந்தி சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

19 hours ago

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…

2 days ago