பிரேக் பிடிக்காமல் போன வேன், குடும்பத்தினரை காப்பாற்ற களத்தில் இறங்கிய ஆனந்தி, நந்தினி, வெளியான மூன்று முடிச்சு சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா அ,சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலும் மூன்று முடிச்சு சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் அனுபவம் ஆனந்தியும் தாலி பிரித்து கோர்க்கும் விஷயம் பற்றி பேசிக்கொண்டே இருக்க மகேஷ் வந்து பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா போன் போட இருவரும் ஜாலியாக சந்தோஷமாக பேசி நலம் விசாரித்து விட்டு திருவிழாவில் சந்திக்கலாம் என்று பேசிவிட்டு ஃபோனை வைக்க அன்பு உங்களுக்கு அவ்வளவு க்ளோஸ் ஃப்ரண்டா என்று கேட்க மகேஷ் என்ன பத்தி தெரிஞ்சவ புல்லா அவன்தான் என்று பெருமையாக சொல்லிவிட்டு பிறகு நீங்க ரெண்டு பேரும் எங்க கூட கோவிலுக்கு வாங்க என்று கூப்பிடுகிறார். பிறகு வேலை செய்பவர்களும் நீங்க அந்த கோவில்ல போய் தாலி பிரித்து கோத்துக்கோங்க என்று சொல்ல இருவரும் சம்மதிக்கின்றனர். ஊர் பிரசிடெண்ட் ஆக இருக்கும் நபரின் மனைவியும் தம்பியும் நம்மளுக்கு தான் மரியாதை கிடைக்கணும்னு பார்த்தா நீ அவங்ககிட்ட கெஞ்சி பேசிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார்.

எதுவுமே நான் திட்டம் இல்லாம செய்யமாட்டேன் மாலை மரியாதை எல்லாம் நம்மள தேடி வரணும் அந்த ரெண்டு குடும்பத்தையும் ஊருக்கு வரவிடாத மாதிரி ஏதாவது பண்ணி மாலை மரியாதை எனக்கு கிடைக்கிற மாதிரி பண்ணுவேன் என சொல்ல அவர்களும் சென்று விடுகின்றன. மறுபக்கம் சூர்யா சந்தோஷமாக இருக்க இன்னைக்கு என்ன இவ்வளவு சந்தோஷம் என்று கேட்க என்னோட பிரண்டு மகேஷை நான் ரொம்ப நாள் கழிச்சு பாக்க போறேன் எனக்காக அக்கறைப்படுறவங்களோட லிஸ்ட் கொஞ்சம் தான் அதுல ஃபர்ஸ்ட்ல அவன் தான் இருப்பான் என்று சொல்ல அவரை பார்க்க ரொம்ப ஆவலோடு இருக்கேன் என்று சொல்ல சுந்தரவல்லி மற்றும் மற்ற அனைவரும் வந்துவிட சூர்யா வேறுபேத்தி பேசுகிறார். பதிலுக்கு சுந்தரவல்லியும் பேச உடனே வெளியில் ஆரன் சத்தம் கேட்க சூர்யா சந்தோஷத்தில் துள்ளி துடித்து வெளிய ஓடி வந்து மச்சான் என கத்த அவர் செல்லோ என சொல்லுகிறார்.

முதலில் சூர்யாவும் மகேஷும் டான்ஸ் ஆட பிறகு ஒவ்வொருவராக இணைந்து மொத்த குடும்பமும் டான்ஸ் ஆடுகின்றனர். ஒருவருக்கொருவர் மாறி மாறி நலம் விசாரித்து விட்டு அறிமுகப்படுத்திக் கொள்ள அந்த நேரம் பார்த்து அன்புவும் ஆனந்தியும் வருகின்றனர். சுந்தரவல்லி மகேஷிடம் கம்பெனி ஸ்டாப்ல வந்து இருக்காங்க என்று கேட்க அவங்க ஸ்டாப் உண்மையா என்னோட ஃபேமிலி மேம்பர் மாதிரி என்று சொல்கிறார். உடனே சூர்யா நந்தினி உங்க எல்லாருக்கும் சாப்பாடு ரெடி பண்ணிட்டா வாங்க சாப்பிடலாம் என்று சொல்ல நாங்க சாப்பிட்டோம் என்று அன்பும் ஆனந்தியும் சொல்ல, சரி நாம போய் சாப்பிட்டு வருகிறோம் என்று சொல்லி அனைவரையும் உள்ளே வர வைத்து உட்கார வைத்து சாப்பாடு பரிமாறுகின்றனர். கொஞ்ச நேரத்தில் அருணாச்சலத்திற்கு வேன் டிரைவர் போன் போட்டு நான் வந்துடுச்சு என்று சொல்ல ஒரு பத்து நிமிஷம் இருங்க சாப்பிட்டு வரம் என சொல்லுகின்றனர். பிறகுதான் அவர் பிரசிடெண்ட் அனுப்பிய ஆள் என தெரிய வருகிறது.

பிரசிடெண்ட் போன் போட்டு அவங்க கிளம்ப மட்டும் தான் செய்யணும் ஆனா இங்க வரக்கூடாது அவங்களுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது என்று சொல்லுகிறார். ராஜாங்கம் அவரது மனைவி இடம் தில்லை குடும்பமே அங்கதான் இருக்கு ரெண்டு குடும்பமே ஒரே நேரத்துல ஒண்ணா போக போறாங்க இனிமே இந்த ராஜாங்கத்தோட ஆட்டம் தான் என்ற சொல்ல, அந்த நேரம் பார்த்து தில்லைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு என போன் வர மகேஷும் நானும் டாடியும் மீட்டிங் முடிச்சுட்டு வரம் நீங்க முதல்ல போங்க என்று சொல்லுகிறார். உடனே ராஜாங்கம் நல்லவன் போல போன் போட்டு விசாரிக்கிறார். மகேஷும் அவர் அப்பாவும் இவர்களை வழி அனுப்பி விட்டு சென்று விடுகின்றனர். நந்தினி அன்பு மற்றும் ஆனந்திக்காக பழம் வெட்டி கொடுக்கிறார். நீங்களும் மகேஷ் சார் மாதிரி ரொம்ப நல்லவரா இருக்கீங்க என்று சொல்ல என்ன எல்லாம் அவன் கூட சேர்க்காத அவன் ரொம்ப நல்லவன் எனக்கு தான் லவ் பெயிலியர் ஆயிடுச்சு என்று சொல்லிவிட்டு உங்களுக்கு ஒரே லவ் தானே என்று கேட்க அன்பு எனக்கு பஸ்ட் லவ்வும் ஆனந்தி தான் லாஸ்ட் லவ்வும் ஆனந்தி தான் என்று சொல்லுகிறார்.

உடனே சுந்தரவல்லி கடுப்பாகி இந்த சொந்த கதை சோக கதை எல்லாம் இங்க வேண்டாம் என்ற கோபப்பட உடனே அசோகன் அப்போ லவ் மேரேஜா அரேஞ்ச் மேரேஜா என்று பட்டிமன்றம் பேசிடலாம் என சொல்ல சுந்தரவல்லி மற்றும் மகேஷ் அம்மா என அனைவரும் அரேஞ்ச் மேரேஜ் குறித்து அவர்களது கருத்தை சொல்லுகின்றனர். உடனே சூர்யா லவ் மேரேஜ்க்கு ஆதரவாக பாட்டு பாடி அசத்துகிறார். உடனே மித்ரா அரேஞ்ச் மேரேஜ்க்கு ஆதரவாக பேச அன்பு நான் சூர்யா பக்கம்தான் என்று சொல்லி காதல் பாட்டு பாட சூர்யாவும் பாட்டு பாடுகிறார். பெத்தவங்களுக்கும் கூட பிறந்தவர்களுக்கும் என்னை என்றாலும் வீட்ல சேர்த்துப்பாங்க ஆனா ஒரு வாட்டி ஒருத்தவங்கள நேசிச்ச உங்களை விட்டுட்டு வந்தான் அவங்களை திரும்பவும் சேர்ந்து வாழ முடியாது என்று ஆனந்து சொல்லுகிறார்.

கல்யாணம் என்பது சாதாரணமான விஷயம் கிடையாது நாலு நட்சத்திரம் என்று எல்லாத்தையும் பார்த்து செய்வது என்று சொல்ல அதற்கு நந்தினி கரெக்ட் தான் அது எல்லாத்துக்கும் ஒரே வார்த்தை தான் காதல் என்று சொல்ல கரெக்டா சொன்னீங்க நந்தினி இதுக்காக ஒரு பாட்டு இருக்கு என்று சொல்லி ஆனந்தி காதல் பாட்டு பாட அனைவரும் கைத்தட்டு ரசிக்கின்றனர். அந்த நேரம் பார்த்து டிரைவர் நெஞ்சு வலிப்பது போல ஆக்ஷன் பண்ணி வண்டியை தாறுமாறாக ஓட்டுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் டிரைவருக்கு நெஞ்சுவலி வர நந்தினி எந்த பக்கம் வலிக்குது எனக்கே அவர் ரைட் சைடு காட்டுகிறார் உடனே நெஞ்சு வலி வந்தால் லெப்ட் சைட் தான் வலிக்கும் என்று சொல்ல முழிக்கிறார். உடனே சூர்யா வண்டி ஓட்டிக்கொண்டு போகப்போகுது பிரேக் பிடிக்க இல்லை. இதனால் குடும்பத்தினர் பயத்தில் பதறுகின்றனர்.

மறுபக்கம் ரவுடிகளிடமிருந்து குடும்பத்தினரை காப்பாற்ற நந்தினி ஆனந்தியும் சண்டை போடுகின்றனர். பரபரப்பான திருப்பங்களுடன் என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu singappenne maha sangamam serial promo update 20-01-26
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

3 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

3 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

3 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

4 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

5 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

5 days ago