அர்ச்சனா கேட்ட விஷயம்,மினிஸ்டர் பதில் என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யாவிடம் நந்தினி எதுக்கு சார் கீழே உட்கார்ந்து சாப்பிட்டீங்க என்று கேட்க நான் உனக்காக சாப்பிடல நந்தினி என்று சொல்ல தெரியும் உங்க அம்மாவை வெறுப்பேத்த தானே என்று கேட்க சத்தியமா அதுக்காக சாப்பிடலை என்று சொல்லுகிறார் அப்போ எதுக்காக சாப்பிட்டீங்க என்று கேட்க, அம்மாச்சி ஓட கை பக்குவத்துக்காகவும் அதுல கலந்து இருக்கிற அன்புக்காகவும் மட்டும்தான் நான் சாப்பிட்டேன் என்று சொல்ல, நீங்க நல்லவரு தான் சார் ஆனா குடிக்கிறத மட்டும் நிறுத்திட்டா நல்லா இருக்கும் என்று சொல்ல அதெல்லாம் பேசக்கூடாது நந்தினி புனிதாவை கூப்பிடு என்று சொல்ல, அவ வீட்டுக்கு போயிட்டா என்று சொல்ல, நீயும் அவள மாதிரி என்கிட்ட சொல்லாம போயிடுவியா என்று சொல்ல நான் உங்ககிட்ட சொல்லிட்டு தான் போவேன் என்று நந்தினி சொல்ல நீ போகக்கூடாது நந்தினி நீ மட்டும் தான் எனக்கு என்று புலம்பிக் கொண்டே படுத்து விடுகிறார். உடனே நந்தினி சூர்யாவிற்கு ஷூ மற்றும் சாக்ஸ் கழட்டி விடுகிறார்.

மறுநாள் காலையில் ரேணுகா அர்ச்சனாவை வந்து சந்திக்க, நான் சூர்யாவோட பொண்டாட்டியா அந்த வீட்ல வாழனும் அதுக்கு ஏதாவது போய் பண்ணு என்று சொல்ல நீங்க இப்படி சொல்றீங்க ஆனா அவரு மந்திரிச்சி விட்ட மாதிரி நந்தினி பின்னாடி சுத்திக்கிட்டு இருக்காரு என்று சொல்லுகிறார். சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லு என்று சொல்ல, மாதவி ரூமில் ஒரு செயின் இருந்தது அதை எடுத்துக்கிட்டு போய் சுந்தரவல்லி அம்மா கிட்ட கொடுத்தேன் அவங்க அடுத்த மாசம் எனக்கு சம்பளம் 1000 ரூபாய் அதிகம் கொடுக்கிறேன்னு சொல்லி இருக்காங்க என்று சந்தோஷமாக சொல்ல அர்ச்சனா கன்னத்தில் அறைகிறார். அங்கு கிடைக்கிற சின்ன விஷயத்தை கூட என்கிட்ட சொல்லணும், நீ அந்த வீட்டில நல்ல பேர் வாங்கினால் உனக்கு சிலையா வைக்க போறாங்க என்று சொல்ல, இன்னொரு விஷயம் சொல்லனும்னு நந்தினி தங்கச்சியை ஸ்கூல் சேர்க்க போகும் விஷயத்தை சொல்ல அப்படியா சரி நீ கெளம்பு என்று அனுப்பி வைக்கிறார். அருணாச்சலத்திற்கு கம்பெனியில் இருந்து போன் போட்டு செக் வேண்டும் என்று கேட்க, அருணாச்சலம் நந்தினியை கூப்பிட்டு செக் கொடுத்து சூர்யாவிடம் கையெழுத்து வாங்க அனுப்புகிறார்.

நந்தினி சூர்யாவிடம் ஐயா செக் புக்ல கையெழுத்து கேட்டார் என்று சொல்ல வச்சிட்டுபோ என்று சொல்லுகிறார் இல்ல உடனே கேட்டார் என்ற சொல்ல சூர்யாவும் கையெழுத்து போட்டு கொடுக்க நந்தினி அருணாச்சலத்திடம் கொடுக்க, செக் நீ வச்சுக்கோமா கம்பெனியில் இருந்து மேனேஜர் வருவாரு அவர்கிட்ட கொடுத்துடு என்று சொல்லிவிட்டு செல்ல, நந்தினி செக்கை எடுத்து கொண்டு போகும் நேரம் பார்த்து கிச்சனில் கருகும் வாடை அடிக்கிறது. இதனால் நந்தினி கிச்சனுக்கு சென்று விட அந்த நேரம் பார்த்து ரேணுகா கையெழுத்து போட்ட செக்கை வவுச்சரில் இருந்து கிழித்து எடுத்து மறைத்து வைத்துக் கொள்கிறார். உடனே நந்தினி அடுப்புல வச்சுட்டு எங்க போன என்று கேட்க தண்ணீர் கீழே போயிட்டு இருந்தது அதைப் பார்க்கப் போனேன் என்று சொல்லுகிறார். அருணாச்சலம் வெளியில் சென்று கொண்டிருக்க மேனேஜர் ஃபோன் போட்டு செக் தேவைபடாது சார் என்று சொல்ல அருணாச்சலம் சரி என சொல்லுகிறார். மறுபக்கம் ரேணுகா செக்குடன் வந்து அர்ச்சனாவை சந்திக்கிறார்.

உடனே அந்தச் செக்கை அர்ச்சனாவிடம் கொடுக்க அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிங்க கூட உதவ மாட்டாங்கன்னு கரெக்ட்டா தான் சொல்லி இருக்காங்க அடிச்சு அடியில இவ்வளவு பெரிய வேலை பார்த்து இருக்க என்று சொல்ல இதை வச்சு என்ன பண்ணுவீங்க என்று கேட்க ஏற்கனவே மூணு கால் சேர்ல இருக்கா இப்ப அருணாச்சலாங்கற நாலாவது காலையும் ஒடச்சிட்டா இதை வச்சுதான் அவளுக்கு ஒரு பெரிய செக் வைக்கப் போறேன் என்று சொல்லி ரேணுகாவை அனுப்பி வைக்கிறார். கிச்சனில் நந்தினி வேலை பார்த்துக் கொண்டிருக்க, விஜி போன் பண்ணி ஃப்ரீயா இருக்கியா நந்தினி நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு இடத்துக்கு போகணும் என்று சொல்ல, எங்க போகணும் என்று நந்தினி கேட்க, அது உனக்கு தான் தெரியும் ஏன்னா அது உங்க அப்பாவோட வீடு தானே என்று சொல்லி, உங்க குடும்பத்தை பாக்கணும் போல இருக்கு போகலாமா என்று கேட்க, கரும்பு தின்ன கூலி வேணுமா அஞ்சு நிமிஷம் ரெடியாகி விடுகிறேன் என்று சொல்ல நான் அங்க வந்துறேன் நீ கெளம்பி ரெடியா இரு என்று சொல்லிப் போனை வைக்கிறார். கல்யாணத்தை கூப்பிட்டு சமையலை பார்த்துக்க சொல்லிவிட்டு நான் வெளியே போகணும் என வேக வேகமாக வர அந்த நேரம் பார்த்து சூர்யாவின் கண்ணில் பூச்சி விழுந்து விட
சூர்யா கண்கள் எரியுது என்று சொல்ல,நந்தினி கண்களை ஊதி விடுகிறார்.

என்ன பண்ற நந்தினி என்று கேட்க,எங்க ஊர்ல எல்லாம் இப்படித்தான் ஊதுவாங்க உங்களுக்கு உறுத்தல் போய்டுச்சா என்று கேட்க, சூர்யா இல்லை சொல்லி இன்னும் அப்படியே தான் இருக்கு என்று கையை கண் கிட்ட எடுத்து கொண்டு போக நந்தினி கண்ணை திறந்து பார்த்து செவந்து இருக்கு என்று சொல்லுகிறார்.பிறகு நந்தினி முந்தானையில் வாயை வைத்து ஊதி சூர்யாவின் கண்ணில் வைத்து எடுக்கிறார்.பிறகு சூர்யாவிற்கு எரிச்சல் குறைய என்ன பண்ண நந்தினி என்று கேட்க,இது எங்க ஊரோட நாட்டு வைத்தியம் என்று சொல்லுகிறார். சூப்பர் நந்தினி கைவசம் பல விஷயம் வச்சிருக்கியே என்று சொல்ல,இப்போ ஓகேவா சார் என்று கேட்டு விட்டு நான் போய் அம்மாச்சிய பாத்துட்டு வரேன்னு சொல்லி கிளம்புகிறார். புனிதா காய்கறிகளை வெட்டிக்கொண்டு பேசிக் கொண்டிருக்க நந்தினி விஜி உடன் வருகிறார். உடனே அனைவரும் சந்தோஷமாக இருக்கீங்க போல என்று சொல்லிவிட்டு விஜியை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.. அம்மாச்சி இவங்க யாரு என்று கேட்க சூர்யா சார் ஓட ஃப்ரெண்ட் விவேக் அண்ணன் இருக்கார்ல அவங்களோட சம்சாரம் என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் மினிஸ்டர் பேப்பர் படித்துக் கொண்டிருக்க அர்ச்சனா வந்து உக்காருகிறார் மினிஸ்டர் ஏதாவது என்கிட்ட பேசணுமா என்று கேட்க ஆமாம்பா எனக்கு ஒரு உதவி பண்ணனும் என்று சொல்லுகிறார். என்ன விஷயம் என்று கேட்க எனக்கு ஸ்கூல்ல சீட்டு வாங்கி கொடுக்கணும் என்று கேட்க எம் பி ,எம் எல் ஏக்கு கூட சீட்டு கிடைச்சிடும் ஆனா ஸ்கூல்ல சீட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் என்று சொல்ல நீங்க என்ன பண்ணுவீங்களோ எது பண்ணுவீங்களோ தெரியாது எனக்கு ஒரு சீட்டு கன்ஃபார்மா கிடைக்கணும் என்று சொல்லுகிறார்.

சரிமா நான் பாத்துக்கிறேன் என்று சொல்ல அப்புறம் இன்னொரு விஷயம் டாடி நீங்க தான் வாங்கி கொடுத்தீங்கன்னு உள்ள சேர்க்க போறவங்களுக்கு தெரியக்கூடாது என்று சொல்ல அஞ்சு ரூபாய்க்கு பண்ணாலே 50 ரூபாய்க்கு விளம்பரம் பண்ணுகிறவர்கள் கிட்ட வந்து எதுவுமே சொல்ல கூடாதுனா எப்படிம்மா என்று கேட்க இப்போ பப்ளிசிட்டியோட பழிவாங்குவது தான் ரொம்ப முக்கியம் அந்த சீட்ட வச்சு ஒரு பாடம் எடுக்க போறேன் அதுக்கான ரிசல்ட் வரும்போது உங்க முன்னாடி வந்து நிற்கிறேன் என்று சொல்ல சரிமா கண்டிப்பா வாங்கி தரேன் என்று சொல்ல,உடனே அர்ச்சனா அப்பனா அப்பா தான் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


moondru mudichu serial today promo update 30-04-25
jothika lakshu

Recent Posts

தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு!

தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…

8 hours ago

போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல்

போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்​துள்ள ‘கருப்​பு’…

8 hours ago

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை… ரசிகர்களுடன் ‘கொம்பு சீவி’ படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…

8 hours ago

’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…

8 hours ago

‘வா வாத்தியார்’ எப்போது ரிலீஸ்?

'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…

9 hours ago

காஞ்சனா பட நடிகைக்கு ஏற்பட்ட கார் விபத்து..வெளியான தகவல்.!!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…

12 hours ago