நந்தினி சொன்ன வார்த்தை, விஜியின் முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க, மறுபக்கம் ஆபீஸில் இருக்கும் அனைவரும் வேலையை முடித்துவிட்டு கிளம்ப, விவேக் மட்டும் வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறார். கொஞ்ச நேரத்தில் வேலையை முடித்துவிட்டு அசோகன் சொன்னது போல அந்தக் கவரை எடுத்து வைத்துக்கொண்டு விவேக் கிளம்பி விடுகிறார். உடனே சுந்தரவல்லி அசோகன் இடம் விஷயத்தை சொல்ல சரி விவேக் ஐ ஃபாலோ பண்ணிக்கிட்டு போங்க ஒரு கட்டத்துல அவனை போலீஸ் மடக்கி பிடிப்பாங்க அப்போ எனக்கு போன் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறார். அசோகனும் சுந்தரவல்லி சொன்னது போல விவேக்கை பாலோ பண்ணி வருகிறார். கொஞ்ச நேரத்தில் விவேக்கை போலீஸ் வழியில் நிறுத்தி பேகை செக் பண்ண வேண்டும் என்று சொல்ல என்ன பிரச்சனை என விவேக் கேட்க பேக் மட்டும் கொடு என்று சொல்லி திறந்து பார்க்கின்றனர்.

அதில் பணம் இருப்பதாக சொல்ல விவேக் அதிர்ச்சி அடைகிறார். 10 லட்சம் திருடிட்டதா சொல்லி இருக்காங்க என்று சொல்ல அது பில் கவர் என்றுதான் சொன்னாங்க என்று சொல்ல நான் வேணும்னா கவர மாத்தி எடுத்துட்டு வந்திருப்பேன் என்று ஆபீஸ்ல போன் பண்ணி கேட்கலாம் என்று சொல்ல நீ திருடி இருப்பேன்னு சொன்னதே சுந்தரவல்லி அம்மா தான் என்று சொல்லிவிட்டு அவரை அரெஸ்ட் பண்ணி அழைத்துச் சென்று விடுகின்றனர். நந்தினி வீட்டுக்கு வந்து கொண்டு இருக்க ஆட்டோவில் வழியில் வந்த விஜி நந்தினியை பார்த்து கட்டி பிடித்து அழுகிறார். நடந்த விஷயத்தை விஜி சொல்ல விவேக் அண்ணா அப்படி பண்ணி இருக்க மாட்டாரு அதுக்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லுகிறார். நம்ம உடனே போய் சுந்தரவல்லி அம்மா கிட்ட சொல்லலாம் என்று சொல்ல கம்ப்ளைன்ட் கொடுத்ததே அவங்கதான் என்று சொல்லுகிறார்.

உடனே அதிர்ச்சியான நந்தினி அவங்க எப்படி இப்படி கேஸ் கொடுத்து இருப்பாங்க வாங்க நேர்ல போய் பேசலாம் என்று வர மறுபக்கம் சுந்தரவல்லி சந்தோஷமாக இருப்பதை பார்த்து மாதவியும் சுரேகாவும் வந்து விசாரிக்கின்றனர். சுரேகா அம்மா நந்தினிக்கு ஒரு பெரிய ஆப்பு வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன் என்று சொல்ல சரி நான் போன் பேசிட்டு சொல்றேன் என சொல்லி அசோகனின் போன் வந்தவுடன் என்னாச்சு என்று கேட்க அசோகன் நீங்க சொன்ன மாதிரியே நடந்துடுச்சு என்று சொல்லுகிறார். போலீஸ் அரெஸ்ட் பண்ணியாச்சா என்று கேட்க மாதவியும் சுரேகாவும் ஒன்னும் புரியாமல் இருக்கின்றனர். நீங்க சொன்ன மாதிரியே எல்லாமே முடிஞ்சிடுச்சு என்று சொல்ல நான் வீட்டுக்கு தான் வந்து இருக்கேன் என்று சொல்ல இப்ப யாரு உங்கள வீட்டுக்கு வர சொன்னது அவனை எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு போய் இருக்காங்க என்ன பண்றாங்கன்னு விசாரிச்சு சொல்லுங்க என்று சொல்லிப் போனை வைக்கிறார்.

சுந்தரவல்லி விஷயத்தை சொல்ல சுரேகா விவேக் தான் நம்ம பிளான்லயே இல்லையே என்று சொல்ல விஜியை கூப்டு சொன்னா அவன் நம்ப சொல்ற மாதிரி சொல்லுவானா இல்ல அந்த வேலைக்காரிக்கு சப்போர்ட் பண்ணுவாளா அதனாலதான் இந்த அரெஸ்ட் என்று சொல்லுகிறார். என்னோட கணக்குப்படி அவை இப்போ வீட்ல வந்து என் கால புடிச்சு கெஞ்சுவா நான் அதை பண்ணனும்னா நீ இதை பண்ணனும் என்று சொல்லி சொல்லுவோம் என்று சொல்ல மாதவியும் சுரேகாவும் சந்தோஷப்படுகின்றனர். மறுபக்கம் விஜி நடந்த நினைத்து அழ நந்தினி ஆறுதல் சொல்லுகிறார். எப்பவும் கூடவே இருக்கிற ஒருத்தர் மேல எப்படி இப்படி ஒரு கம்ப்ளைன்ட் கொடுப்பாங்க என்னதான் சூரியா சார் பிரண்டா இருந்தாலும் நம்மள நம்பி ஒரு வேலை கொடுத்திருப்பாங்க அதுக்கு நம்ம கரெக்ட்டா இருக்கணும் என்று சொல்லுவாரு என சொல்லி கண்கலங்கி அழுகிறார்.

என்னதான் இருந்தாலும் சூரியா அண்ணன் இருக்காரு அவர் குடும்பம் இருக்கு என்று தைரியமா இருந்த ஆனா இப்போ அந்த குடும்பமே இப்படி பண்ணும்போது எனக்குன்னு யாரு இருக்கா என்று கேட்க நந்தினி எதுவும் கவலைப்படாதீங்க நம்ம போய் நேர்ல பேசினா எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வர சுரேகா ஆட்டோவை கவனித்து விட்டு சந்தோஷப்பட்டு வந்து சுந்தரவல்லி இடம் சொல்லுகிறார். வீட்டுக்குள் வந்த விஜி சுந்தரவல்லி இடம் இவ்வளவு நாளா அவரு வேலை பாத்துக்கிட்டு இருக்காரு ஆனா நீங்க திடீர்னு அவர் மேல இப்படி திருட்டு கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கீங்களே என்று கேட்க மாதவி அவர் திருட்டு புத்தியோடு இருந்தா என்ன பண்ண முடியும் என்று கேட்க உடனே சுந்தரவல்லி இடம் உங்களுக்கு தான் அவரைப் பற்றி தெரியுமே அவர் இந்த வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு தானே இருக்காரு என்று சொல்ல சுரேகா அப்படி இருக்கிறவங்க தான் இப்போ இது மாதிரி பண்றாங்க என்று சொல்லுகிறார்.இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கல்யாணத்திடம் சம்பந்தமே இல்லாம விவேக் அண்ணனை கஷ்டப்படுத்தணும் என்ன நடந்தாலும் அவரை போலீஸ் கஸ்டடியில் இருந்து எடுத்து ஆகணும் என்று சொல்லுகிறார். விவேக் அண்ணனை வெளியில் எடுக்க ஒத்துக்கிட்டாங்களா இல்லையா இன்று நந்தினி விஜய் இடம் கேட்கிறார்.

என் வாழ்க்கையை காப்பாத்திக்க உன் வாழ்க்கையை பணயம் வைக்கணும்னு சொல்றாங்க என்று சொல்ல சுந்தரவல்லி,மாதவி, சுரேகா மூவரும் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர் மாதவி சுந்தரவல்லி இடம் இவ இப்படி பேசுவா என்று நினைக்கல என்று சொல்ல நானும் தான் நினைக்கல என்று சொல்லிவிட்டு ஃபோன் போடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial promo update 26-11-25
jothika lakshu

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

2 days ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

2 days ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

3 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

3 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

3 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

3 days ago