moondru mudichu serial today promo update 24-12-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அசோகன் கல்யாணத்திடம் பாலை சுண்ட காய்ச்சி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டு இருக்க அவரும் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க அசோகனும் குடித்துவிட்டு ஆயிரம் குதிரை பலம் வந்திருக்கு இந்த வீட்டுக்கு முதல் வாரிசை கொடுக்கப் போறது நான்தான் என்ற சொல்லி வீர வசனம் பேசி எழுந்திருக்க கொஞ்ச நேரத்தில் வாய்ஸ் மாரி கை தானாக சல்யூட் அடிக்கிறது. சத்தம் கேட்டு சுந்தரவல்லி மற்றும் அருணாச்சலம் இருவரும் வந்துவிட எதுக்காக இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கின்றனர்.
அதையும் கேட்காமல் அசோகன் அப்படியே பண்ணிக்கொண்டு இருக்க சுந்தரவல்லி மாதவி சுரேகா என அனைவரையும் கூப்பிட குடும்பத்தினர் அனைவரும் வந்து விடுகின்றனர். உடனே அசோகன் எல்லோருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டே இருக்க என்னாச்சு என்று கேட்கின்றனர். சூர்யா அசோகனை கலாய்த்து கொண்டிருக்க நந்தினிக்கும் அசோகன் வணக்கம் சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி இப்ப எதுக்கு வேலைக்காரிக்கு உன் புருஷன் உனக்கு வச்சுக்கிட்டு இருக்காரு என்று கேட்க சூர்யா என் பொண்டாட்டி வேலைக்காரி கிடையாது இந்த வீட்டோட மருமக கம்பெனியோட சிஇஓ என்று சொல்லுகிறார் உடனே நந்தினி அவர் வேணுமே பண்ணல அவருக்கு ஏதோ ஒன்னு நடந்திருக்கு என்று சொல்ல மாதவி அசோகனை அழைத்துச் சென்று விடுகிறார். மாதவி ரூமில் அசோகனிடம் என்னாச்சு என்று கேட்க அவரும் நடந்த விஷயத்தை சொல்லுகிறார். உடனே மாதவி கோபத்தில் அசோகனை திட்டுகிறார். உடனே சுரேகா அந்த கால் பாக்கெட்டில் நெயில் பாலிஷ் கலந்திருந்தோம் நந்தினிக்காக நீங்க ஏன் குடிச்சீங்க என்று கேட்கிறார்.
மாதவி டாக்டருக்கு போன் போட்டு அசோகன் பாலில் நெயில் பாலிஷ் கலந்து குடித்து விட்டார் அதுக்கு ஏதாவது ட்ரீட்மென்ட் இருக்கா என்று கேட்க அவரும் மாதவியிடம் சில விஷயங்களை சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி சூர்யாவை ரூமுக்கு அழைத்து வந்து இது மாதிரி பண்ணாதீங்க என்று சொல்ல சரி நான் வேலைக்கு கிளம்புகிறேன் என்று சொல்ல ஒரு பத்து நிமிஷம் இருங்க நான் டிபன் ரெடி பண்ணுகிறேன் என்று சொல்ல, சூர்யா சரியென சொல்லுகிறார். சரி உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க என்று சொல்ல பொங்கல் சாம்பார் சட்னி என சொல்ல சீக்கிரம் ரெடி பண்றேன்னு சொல்லிவிட்டு சென்று விடுகிறார். நந்தினி கிச்சனுக்கு வந்து பரபரப்பாக வேலை பார்க்க என்னாச்சுமா உனக்கு என்று கேட்கிறார். சூர்யா சார் அவசர அவசரமா கிளம்புனாரு அவர சாப்பிட்டு கிளம்ப சொல்லி சொல்லி இருக்கேன் அதனால தான் பாஸ்ட்டா செஞ்சுகிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார்.
அவ்வளவு தானே இவ்வளவு சீக்கிரத்தில செஞ்சு விடுவோம் என்று சொல்லி இருவரும் வேலையை ஆரம்பிக்கின்றன. கொஞ்ச நேரத்தில் சமையலையும் முடித்து விட சூர்யாவும் வந்து சாப்பிட உட்காருகிறார். உடனே அருணாச்சலமும் சுந்தரவல்லியும் வந்து உட்காரா மூவருக்கும் சாப்பாடு பரிமாறுகின்றனர். நிஜமாவே நந்தினி நீங்க யாரையும் வெறுப்பேத்த நான் இங்க சொல்லல பத்து நிமிஷத்துல இவ்வளவு சூப்பரா சமைச்சு இருக்க என்று சொல்ல அருணாச்சலமும் பாராட்டுகிறார். பக்காவான டேஸ்ட்ல இருக்கு என்று சொல்ல, சுந்தரவல்லி கடுப்பாகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவின் சட்டையை போட்டுக் கொண்டிருக்க தூங்கப்போகும் நேரத்தில் அதை கழட்ட போக எதுக்கு கழற்ற என்று சூர்யா கேட்கிறார். தூங்க போகணும் சார் என்று சொல்ல அதை போட்டுக்கிட்டே கூட தூங்கு ஏசி வர ஃபேன் ஓடிக்கிட்டு இருக்கு ஜில்லுனு இருக்கும் இல்ல உனக்கு குளிரும் நீ போட்டுக்கோ என்று சொல்ல நந்தினி தயங்குகிறார் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ போட்டுட்டே தூங்கு என்று சொல்ல சூர்யா முன் நந்தினி சந்தோஷமாக இல்லாதது போல் பண்ணிவிட்டு மறைமுகமாக சந்தோஷமாக சிரித்துக்கொண்டே அந்த சட்டையுடன் படுத்துக் கொள்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…