நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி மாதவி இடம் பிசினஸ் மீட்டிங்கு சூர்யா போக வேண்டியது அந்த மீட்டிங்கை நீ போய் அட்டென்ட் பண்ணிட்டு வா என்று சொல்ல மாதவி டெல்லிக்குப் போக தயங்க எனக்கு ஒரு ஐடியா இருக்கு என்று சொல்லி அசோகன் நந்தினியை டெல்லிக்கு அனுப்பலாம் என்று சொல்ல மாதவி கடுப்பாகி திட்டுகிறார். உடனே மாதவி அப்பாவை போக சொல்லலாம் என்று சொல்ல சூர்யா இப்படி இருக்கும்போது எப்படி அவர் போவாரு என்று கேட்க, மாதவி ஏற்கனவே அவ குடும்பத்தை அடிச்சு விரட்டியாச்சு இப்போ வீட்ல சூர்யாவும் தேரி வருவதற்கு 15 நாள் ஆகும் அவளுக்கு இருக்க சப்போர்ட் அப்பா மட்டும்தான் அவர் மட்டும் போயிட்டாருனா அவர் தொக்கா நம்மகிட்ட மாட்டிப்பா அவளை துரத்தி அடிச்சிடலாம் என்று சொல்ல சுந்தரவல்லியும் யோசிக்கிறார்.

மறுபக்கம் நந்தினி மாதவி அடித்த விஷயத்தை சொல்ல கல்யாணம் ஒரு பக்கம் சந்தோஷப்பட்டு பேச அதுமட்டுமில்லாம இந்த கோவம் அவங்க மனசுல கொழுந்துவிட்டு எரியும் அதை எப்படி சமாளிக்க போற என்று சொல்ல நந்தினி பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார். சூர்யா சாருக்கு இப்படி ஆக காரணமே இவங்கதான் அவங்களை எப்படி சும்மா விட முடியும் என்று கேட்கிறார். அருணாச்சலம் வந்து சுந்தரவல்லி இடம் ஏதாவது டாக்டர் சொன்னார்களா என்று கேட்க அவனுக்கு அதெல்லாம் சரியாகிவிடும் ஆனால் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று சொல்ல, என்ன விஷயம் என்று கேட்க முக்கியமான விஷயமா ஒரு மீட்டிங்கு டெல்லிக்கு போகணும் என்று சொல்ல அருணாச்சலம் நீ போயிட்டுவா என்று சொல்லுகிறார். என்னால சூர்யாவை இப்படி விட்டுட்டு போக முடியாது என்று சுந்தரவல்லி உறுதியாக சொல்லுகிறார்.

உடனே சந்திரவல்லி இப்ப நீங்க டெல்லிக்கு போறீங்களா இல்லையா என்று கேட்க இப்ப என்ன நீங்க இங்க இருகன்னு நான் போகணும் அவ்வளவு தானே என்று சொல்லிவிட்டு போறேன் என சொல்லி டாக்டரை வந்து பார்க்கிறார். சூர்யா எப்படி இருக்கான் என்று கேட்க, அவருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனால் லங்ஸ்ல இருக்கிற புகை மட்டும் இன்னும் குறையல நீங்க டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம் இல்ல அட்மிட் பண்ணியும் பார்க்கலாம் அவருக்கு அப்பப்ப கான்சியஸ் வரும் போய்கிட்டு இருக்கும் என்று சொல்லுகிறார். அவரு எவ்வளவு ரெஸ்ட்ல இருக்காரோ அவ்வளவு சீக்கிரம் ரெக்கவரி ஆயிடுவாரு என்று சொல்ல, விஜியும் விவேக்கும் வந்து நலம் விசாரிக்க சுந்தரவல்லி பரவாயில்லை என்று சொல்லுகிறார்.

சூர்யா அண்ணனை பார்க்கலாமா என்று கேட்க உள்ள யாரையும் பார்க்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க இங்க இருந்து பாருங்க என்று சொல்ல விஜி கதவு வழியாக பார்த்துவிட்டு கண்கலங்கி அழுகிறார். கூடப்பிறந்தவர்களே என்ன கவனிக்காத அப்போ எனக்காக நீங்க தீபாவளி சீர் கொடுத்தீங்க உங்களுக்கு ஒன்னும் ஆகாது நீங்க நல்லபடியா வந்துடுவீங்க என்று சொல்லுகிறார். நந்தினி வெளியில் அமைதியாக உட்கார்ந்து இருக்க கல்யாணம் உள்ளே கூப்பிடுகிறார். வீட்டுக்குள்ள வர தோணலான எங்க பாத்தாலும் அவர் இருக்கிற மாதிரி தோணுது என்று சொல்ல கல்யாணம் ஆறுதலாக பேசிக் கொண்டிருக்க அருணாச்சலம் வருகிறார். நந்தினி சூர்யா சாருக்கு எப்படி இருக்கு என்று கேட்க, டாக்டரை பார்த்துட்டு தான் வந்தேன் அம்மா எதுவும் பெரிய பிரச்சனை இல்லன்னு சொல்லிருக்காரு என்று சொல்லுகிறார்.

பிறகு உடனே டெல்லிக்கு போகும் விஷயத்தை சொல்ல, இவர் இப்படி இருக்கும்போது எப்படி ஐயா என்று கேட்க போயிட்டு முடிச்சுட்டு வந்துடலாமா என்று சொல்ல என்ன இருந்தாலும் நீங்க இருந்தா கொஞ்சம் தைரியமாக இருக்கும் என்று சொல்ல, புரியுதும்மா வேறு வழி இல்ல ஏற்கனவே நீ மாதவி அடிச்சதுல ஏதாவது பண்ணனும்னு குறியா இருப்பாங்க நான் வேற என்ன சூர்யா வேற இப்போ நல்லா இல்ல என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு கல்யாணம் எல்லாத்தையும் எடுத்து வை என்று சொல்ல நந்தினியும் சரியென சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவை ஸ்டிரக்சரில் வீட்டுக்கு தள்ளி கொண்டு வர சூர்யா சுயநினைவு இல்லாமல் இருக்கிறார் உடனே நந்தினி மேலே போக முயற்சி செய்ய சுந்தரவல்லி தடுத்து நிறுத்தி நீ எதுக்கு இப்போ மேல போற என்று கேட்கிறார் சூர்யா சார் அவர் எப்படி இருக்காருன்னு கேட்கணும் என்று சொல்ல நீயும் உங்க அப்பனும் பண்ணதெல்லாம் போதாதா அவன மொத்தமா அனுப்ப பாக்கறீங்களா என்று கேட்க அவரை பக்கத்துல இருந்து நான் பாத்துக்குறேன்மா என்று சொன்ன நாங்க இருக்கோம்ல எங்களுக்கும் கை கால் இருக்கு அவனுக்கு அம்மா நான் இருக்க அக்கா தங்கச்சி இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க படிக்கட்டுல கால் எடுத்து வச்ச காலை ஒடச்சிடுவேன் கண்ணு முன்னாடியே நிக்காத இங்க இருந்து போயிடு என்று நந்தினியை திட்டிய அனுப்பி விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 11-11-25
jothika lakshu

Recent Posts

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட நடிகை ஜோதிகா..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா.…

15 minutes ago

குடும்பத்தினரிடம் உண்மையை சொல்லப்போன மீனா, கண்ணீர் விட்டு கெஞ்சிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…

3 hours ago

ரேங்கிங் டாஸ்க்கில் பார்வதி செய்த வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

4 hours ago

Kanaga Lyrical Video

Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…

4 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, மாதவி பேசிய பேச்சு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

6 hours ago

வாட்டர் மெலன் ஸ்டார் சொன்ன வார்த்தை, கானா வினோத் கொடுத்த பதில், வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

6 hours ago