நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா விவேக் கடத்தல் காரர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ரவுடிகள் ஒரு இடத்தில் வந்து இறங்கி பணம் வந்த உடனே எண்ணிப் பார்த்துட்டு கரெக்ட்டா இருந்தா சொல்றேன் இவளை கழட்டி விட்டுவிடு என்று சொல்லிவிட்டு தனியாக வந்து சூர்யாவுக்கு போன் போடுகிறார். நீ இருக்கிற இடத்திலிருந்து 100 மீட்டரில் ஒரு குப்பை தொட்டி இருக்கு அதில் பணத்தை வை கரெக்டா இருந்தா பத்து நிமிஷத்துல உன் பொண்டாட்டி வந்துருவா நான் எப்படி நம்புவது என்று கேட்க நான் தொழிலில் சுத்தமாக இருப்பேன் என்று சொல்லி பெட்டியை வைத்துவிட்டு கிளம்பி போகச் சொல்லுகிறார். விவேக் மற்றும் சூர்யா இருவரும் பணப்பெட்டியை குப்பை தொட்டி பக்கத்தில் வைத்துவிட்டு இந்த இடத்துல பணத்தை வைக்க சொன்னவங்க இந்த இடத்திலிருந்து எங்கேயாவது பார்த்துக்கிட்டு தான் இருப்பாங்க என்று சொல்லுகிறார்.

பிறகு கிளம்பலாம் என சூர்யாவும், விவேக்கும் கார் எடுத்துக்கொண்டு கிளம்ப கடத்தல் காரர்கள் பணப்பெட்டி தூக்கிக்கொண்டு வந்து திறந்து பார்க்க அதில் ஹெலிகேம் இருப்பதை பார்த்து ரவுடிகள் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே ரவுடிகள் ஓட சூர்யா பின்னாலேயே ஹெலிகேம் ஆப்ரேட் செய்கிறார். ஒரு இடத்தில் இரண்டு கடத்தல் காரர்கள் பிரிந்து ஒருவர் மட்டும் நந்தினி இருக்கும் கார் பக்கம் ஓடி வர சூர்யா ஹெலிகாமை பாலோ பண்ணி கரெக்டாக ஸ்பாட்டுக்கு வந்து விடுகிறார். ரவுடிகள் அசந்த நேரம் பார்த்து நந்தினி கார் கதவை திறந்து கொண்டு ஓட சூர்யா கவனித்து விடுகிறார்.

உடனே ரவுடிகளிடம் சூர்யா சண்டை போட்டுக் கொண்டிருக்க, விவேக் போலீசுக்கு போன் போடுகிறார். சூர்யா நந்தினி கையில் இருக்கும் கட்டையை அவிழ்த்துவிட்டு போகச் சொல்ல போகாமல் நந்தினி அங்கேயே நிற்கிறார். சூர்யா ரவுடிகளை வெளுத்து வாங்க போலீஸ் வருகின்றனர். போலீஸ் சூர்யாவை பாராட்டிவிட்டு ரவுடிகளை பிடிக்கின்றனர். சிங்காரம் பதட்டமாக ஓடிவந்து சைக்கிளை கீழே போட்டுவிட்டு எங்கே எனத் தேட இவர்களைப் பார்த்து விட்டு ஓடி வந்து நலம் விசாரிக்க சூர்யாவிற்கு நன்றி சொல்ல இதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க வீட்ல ஏதும் சொல்லிக்காதீங்க வாங்க போகலாம் என்று கூப்பிட்டு சொல்கிறார்.

அருணாச்சலத்திற்கு போன் போட்டு நந்தினி கிடைத்த விஷயத்தையும், சூர்யா காப்பாற்றிய விஷயத்தையும் சொல்ல அருணாச்சலம் சந்தோஷப்படுகிறார். அருணாச்சலம் போலீசுக்கு நன்றி சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறார். மூவரும் காரில் வர, விவேக் நந்தினி இடம் சூர்யா இது மாதிரி நான் பார்த்ததே இல்ல சாப்பிடாம சரியா தூங்காம பயந்துட்டான் என்று சொல்ல, நந்தினி மன்னிச்சிடுங்க சார் என்பதை சொல்ல நீ எதுவுமே சொல்ல வேண்டாம் உனக்கு எந்த ஆபத்தும் இல்ல என்று சொல்லுகிறார். பிறகு கடத்திய விஷயத்தையும் பிறகு தப்பித்த விஷயத்தையும் சொல்லுகிறார். அங்க இருக்கிறவங்க எல்லாரும் அக்கா அக்கான்னு யார்கிட்டயோ பேசுறாங்க அவங்களும் வந்து ரெண்டு வாட்டி என்கிட்ட பேசினாங்க அவங்க பேச வரும்போது மட்டும் என் கண்ண கட்டி விட்டுடுவாங்க என்று சொல்ல, அப்போ அந்த லேடி ஓட முகம் தெரியக்கூடாதுன்னு பிளான் பண்ணி இருக்காங்க என்று சூர்யா சொல்லுகிறார்.

நீ எதை பத்தியும் யோசிக்காத நந்தினி என்று சூர்யா சொல்ல விவேக் வழியில் இறங்கி விடுகிறார். பிறகு சூர்யாவும் நந்தினியும் காரில் செல்கின்றனர். இத்துடன் எபிசோடு முடிவடைகிறது

இன்று வெளியான ப்ரோமோவில் நீ எப்படி தொலைவ என்று சுந்தரவல்லி நந்தினி திட்டிக் கொண்டிருக்க சூர்யா அவ எங்கேயும் தொலைய மாட்டா இங்கதான் இருப்பா என்று சொல்லுகிறார். சூர்யாவிடம் நந்தினி யார் யாரோ புதுசு புதுசா வந்து மிரட்டிட்டு போறாங்க என்ன நடக்குதுன்னு தெரியல என்று சொல்ல நான் கண்டுபிடிக்கிறேன் நந்தினி என்று சூர்யா சொல்லுகிறார்.

நான் உனக்கு கொடுத்த வேலையை அதுக்கு முன்னாடி யாரோ ஸ்மெல் பண்ணி நந்தினியை கடத்தி இந்த ஆட்டம் போட்டு இருக்காங்க என்று டெல்லியிடம் சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

12 hours ago

போட்டியாளர்கள் சொன்ன பதில், பார்வதி கொடுத்த ரியாக்ஷன், வெளியான நான்காவது ப்ரோமோ.!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

13 hours ago

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

20 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

20 hours ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

20 hours ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

20 hours ago