moondru mudichu serial today episode update 29-07-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் ரேணுகா எல்லா உண்மையையும் குடும்பத்தினரிடம் சொல்ல, அப்போ இந்த வீட்ல நடந்த எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம் எல்லா பிளானும் அவ போட்டு இருக்கா நீ அதை நடத்தி இருக்க அப்படித்தானே என்று கேட்கிறார். அந்த அர்ச்சனாவை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுனீங்க இந்த குடும்பத்தையே நாசம் பண்ண எல்லா வேலையும் பார்த்து இருக்கா அவ பண்ண எல்லா பிரச்சனைக்கும் பழி என் பொண்டாட்டி மேல வந்தது. இப்பயாவது யார் மேல தப்புன்னு புரியுதா உங்க எல்லாருக்கும், இந்த குடும்பத்துக்கு நல்லது பண்ண நந்தினி வெளியே துரத்திட்டு நாசம் பண்ண அர்ச்சனாவை தலையில் தூக்கி வைத்து ஆடுனாங்க அவ ஒரு பக்காவான பிராடு அது ஏன் உங்களுக்கு யாருக்கும் கண்டுபிடிக்க தெரியல என்று கேட்கிறார். அவ இந்த வீட்டுக்கு முதல் தடவை வந்த போது வீட்டை விட்டு துரத்துங்கன்னு சொன்ன, யாராவது கேட்டீங்களா அவ பழிவாங்குவதற்கு மட்டும்தான் வந்து இருக்கா அதுக்காக தான் இந்த வஷத்தை அனுப்பி இருக்கா இது புரியாமல் சுத்திக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.
மாதவி உன்னை எவ்வளவு நம்பினோ இப்படி ஏமாத்தி இருக்க என்று சொல்ல,சுரேகா இன்னும் எவ்வளவு மறச்சி இருக்காலோ என்று சொல்ல, இதுக்கு அப்புறம் எதுவும் இல்லை என்று ரேணுகா அழ சூர்யா இந்த ஆடியோ மட்டும் இல்லன்னா இவ ஏமாற்றி இருப்பா அதனால தான் ரெக்கார்ட் பண்ண என்று சொல்லி அதை எப்படி ரெக்கார்ட் பண்ண என்ற விஷயத்தை சொல்லுகிறார். அப்போது நந்தினி சூர்யாவிடம் நடந்த விஷயங்களை சொல்ல, சூர்யாவும் நந்தினியும் ரேணுகா தூங்கிக் கொண்டிருக்கும் போது அவளுக்கே தெரியாம ரெக்கார்ட் ஆப்ஷனை ஆன் பண்ணி வைத்தோம். அன்னைக்கு நைட்டு அர்ச்சனா பாலில் விஷம் கலக்கம் போகும் விஷயத்தை சொன்னதுனால எங்களுக்கு தெரிஞ்சிடுச்சு என்று சொல்லுகிறார். இவளை கொஞ்ச நேரம் விட்டிருந்தா மொத்த குடும்பத்தையும் நடுத்தெருவில் நிக்க வெச்சிருப்பா என்று சுரேகா சொல்ல அந்த நேரம் பார்த்து அர்ச்சனா போன் போடுகிறார்.
ஸ்பீக்கரில் போடுறேன் எந்த உண்மையை சொல்லாமல் நீ பேசு இல்லன்னா போலீஸ் வரும் என்று சொல்ல ரேணுகாவும் பேசுகிறார். கொடுத்த வேலை என்னாச்சு சூர்யாவுக்கும் நந்தினிக்கும் பாலில் கலந்து கொடுத்துட்டியா என்று கேட்கிறார். ரேணுகாவும் கலந்து கொடுத்துட்டேன் என்று சொன்ன பிறகு அந்த வீட்டில திமிர் புடிச்ச ஆயா அந்த சுந்தரவல்லி இருக்காளா என்று சொல்லுகிறார் என்னைக்காச்சு அவளுக்கு ஒரு பெரிய ஆப்பு வைக்கணும் ரேணுகா என்று சொல்லிவிட்டு நானே அவகிட்ட பேசுகிறேன் வை என போனை வைக்க சுந்தரவல்லி ரேணுகாவை அறைகிறார். உடனே சுந்தரவல்லிக்கு அர்ச்சனா போன் போட சூர்யா உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக பேச சொல்லுகிறார். சுந்தரவள்ளியும் பொறுமையாக பேச உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்காமல் போயிட்டேன். அதனால நேர்ல வந்து பாக்குறேன் வீட்ல தானே இருக்கீங்க என்று சொல்ல ஆமாம் என்று சொல்லுகிறார்.
குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க அர்ச்சனா வருகிறார். அர்ச்சனா வந்து ஹாய் ஆன்ட்டி என்று பேச யாரும் எதுவும் பேசாமல் இருக்கின்றனர். உடனே சூர்யாவிடம் திரும்பவும் ஆன்ட்டி கிட்ட வம்பு பண்ணிட்டியா அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகலாம் இல்ல என்று அட்வைஸ் கொடுக்கிறார். உடனே சூர்யா நம்ம வீட்டுக்கு யாரு ரேணுகா வந்திருக்காங்க என்று கேட்க அர்ச்சனா அம்மா என்று சொல்லுகிறார். எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்க இவ உனக்கு அம்மாவா என்று கேட்கிறார். உனக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா அர்ச்சனா சொல்லவே இல்ல என்று கேட்கிறார். ஆன்ட்டி ஆன்ட்டி உங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கணும் வரட்டுமா ஆன்ட்டி என்ன நடிப்புடா சாமி என்று சொல்லுகிறார்.
வேற லெவல் அர்ச்சனா நீ என்று சொல்ல ரேணுகா எல்லாமே தெரிஞ்சிருச்சு என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்லுகிறார். என் புருஷன் என் புள்ளை எல்லாரையும் மீறி உனக்கு என்னோட சைனிங் அத்தாரிட்டி கொடுத்தேன், என் புள்ளைய கொல்ல பாத்து இருக்க என் புருஷனை கைய ஒடச்சிருக்க உன்ன போய் இந்த வீட்டுக்கு மருமகளாக்கா பார்த்தேனே எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் பண்ணி இருக்க என்று கேட்க மாதவி இவள வீட்ல சேக்காதீங்கன்னு சொன்னா கேட்டீங்களா என்று கோபப்படுகிறார். ஓ எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சிடுச்சா ஆமா நான் தான் பண்ணினேன் என சொல்ல, நீ இவ்வளவு பெரிய துரோகம் பண்ணி இருக்க என்று சொல்ல நான் பண்ணதுக்கு பேரு துரோகம் என்றால் மண்டபத்து வரைக்கும் போயிட்டு தாலி கட்டாமல் பண்ணதுக்கு பேரு என்ன நீங்க துரோகம் பண்ணுவீங்க நான் அமைதியா இருக்கணுமா நீங்க ரெண்டு அடி அடிச்சா நான் பத்து அடி அடிப்பேன் ஆயுசுக்கும் மறக்க முடியாத அளவுக்கு அடிப்பேன் என சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா சுந்தரவல்லி இடம் உன்ன நாங்க தப்பா நினைச்சுட்டோம் சாரிமா என்று மனப்பூர்வமா மன்னிப்பு கேட்கணும் என்று சொல்லுகிறார் மறுபக்கம் அருணாச்சலம் அர்ச்சனா உனக்கு மட்டும் ஏன் நல்லவளா தெரிஞ்சா ஏன்னா நந்தினி உனக்கு பழி வாங்கணும் என்று சொல்லுகிறார்.
நந்தினி சூர்யாவிற்கு சாப்பாடு கொடுக்க, உங்களுக்கு கை எப்ப சரியாகும் என கேட்கிறார் எதுக்கு என்று கேட்க ஊருக்கு போயிடலாம்னு என்று சொல்ல சூர்யாவின் முகம் மாறுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள்…
தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…